விளைஞ்சு கிடக்கு விளைஞ்சு கிடக்கு
எங்க வயலுதான் …
நிறைஞ்சு கிடக்கு நிறைஞ்சு கிடக்கு
எங்க மனசுதான் …
பாடுபட்டால் பலன் கிடைக்கும்
எங்க மண்ணில்தான் தான்..
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு
எந்த நாளும்தான்….
ஓடு ராசா ஓடு ராசா எழுவான் கரைக்கு
பொழுது சாயுமுன்னே திரும்பிடணும்
நம்ம படுவான் கரைக்கு …
குடலை நிறைஞ்சு கதிரு பறிஞ்சு
தலை கவிழ்ந்து கிடக்குது…எங்க
வயலில் நுழைந்து வரம்பில் நடந்தால்
மனசு மயங்குது பயிர் மணத்தில் கிறங்குது
வாய்க்கால் வழியே தண்ணீர் வந்து
வரவை நிறையுது -நெல்லு
காய்த்து பழுத்து நிற்கும் வரைக்கும்
எங்கும் பரவிக் கிடக்குது …
பச்சை வயல் பழுத்துவிட்டால்
தங்க வயல்தான்,,அது
அறுவடையில் சிக்கிவிட்டால்
எங்க வசம்தான் …
ஓடு ராசா ஓடு ராசா எழுவான் கரைக்கு
பொழுது சாயுமுன்னே திரும்பிடணும்
நம்ம படுவான் கரைக்கு ..
கவிஞர் கோவிலூர் செல்வராஜன்