நேசங்கள்.

விதை நெல் போன்றது.
சரியான
போகத்தில் விதைப்பதில்
குறியாயிரு..
பருவ கால
மாற்றங்கள் மனதை
குழப்பும்
தெளிவாயிரு..
அறுவடை
தேறும் வரை
உழைப்பதில்
அவதானமாயிரு..
உன்
காணியாக இருந்தாலும்
ஆணிகள்
புதைபட வாய்ப்புண்டு..
களைகளும்
கண்டபடி தலையெடுக்கும்
விளைவுகளும்
விபரீதமாயிருங்கும்..
பசுமையும்
பெரும் புரட்சியே
எழுச்சியோடு
எதிர் கொள்..
நேர்மையை
நித்தம் உரமிடு
சத்தியத்தை
சாத்தியமாக்கு..
சமரசத்தை
சாமரமாக்கு
பரஸ்பரத்தை
வாழ்க்கையாக்கு..
ஆக்கம் கவிஞர் தயாநிதி