நினைத்துப் பார்க்க முடியாத சிறப்புக்களுடன் எசன் மாநகரில் இளையோர் நடத்திய பொங்கல் விழா கோலாகலமாக அற்புதமான பல கலைப்படைப்புக்களுடன் நிறைவாக நேற்றைய தினம் நடைபெற்றது. ஒரு இளைஞனுக்குள் இத்தனை திறமைக்கு இருக்கிறதா என்று ஆச்சரியக் கண்கொண்டு பார்க்கக் கூடிய விதமாக சிவவினோபனின் அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. அதற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் கோபிகாவும் தன் அற்புதமான குரலில் அறிவிப்பைச் செய்திருந்தார். ஜேர்மனி மொழியிலேயே Düren இல் இருந்து வந்திருந்த சோபனாவும் சிறப்பாக அறிவிப்பை நிகழ்த்தினார். இளையோர்களின் கலைப்படைப்புக்கள் அனைத்தும் சபையோர் கண்களை மேடையை விட்டு அகல விடவில்லை. உலகப் புகழ்பெற்ற புல்லாங்குழல் வித்துவான் Flute Guy பிரவீண் இலண்டனில் இருந்து வந்து சபையோரை ஆச்சரியப்பட வைத்தார். இலண்டனில் இருந்து வந்த பிரபல பாடகர் ராகவ் பாடல்களும் வியப்பில் ஆழ்த்தின. நடனங்கள், நாடகங்கள் அரங்கை அதிர வைத்தன . இளைஞர்களா? கொக்கா? என்னும் வகையில் அனைத்து நிகழ்ச்சிகளும் அமைந்திருந்தன. உபசரிப்பு அபாரம் . ஒரு நிறைவான நிகழ்வுக்கு நான் கௌரவவிருந்தினராக கலந்து கொண்டமையை இட்டு பெரு மகிழ்ச்சி கொள்கின்றேன். எதிர்கால உலகத்தை இளையோர் பெருமைப்படும் வகையில் கொண்டு செல்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்குள் தெளிவு பெறுகின்றது. இந்நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திய இளையோர் பாராட்டப்பட வேண்டியவர்களே