நாமும் நம்மவரும் …ஆக்கம் நோர்வே வே.புவிராஜ் …

கார்த்திகை வருகுது
இனி தமிழ் மேல் பற்றுவரும்
தமிழன் என்ற கெத்துவரும் முகநூல்￰ பக்கத்திலும் வலைத்தள தெப்பத்திலும் புதுப்புது கவிதைவரும் அவ்வப்போ தமிழர் என்ற உணர்வு வரும் .
ஓஞ்ச பெண்டுகள்
மார் அடித்த கதையாய் ஒப்புக்கு சப்பாணியாய்
மாஞ்சு அழாமல்
பூவிழுந்த கண்ணால் வானவில்லைப்பார்க்கும் கேடுகெட்ட சனம் .

அணல் பறக்கும்
சித்திரை வெய்யில்போல
அடியில காற்றுப்போல
ஐப்பசியில் மழைபோல
காத்திகையில்
வருக்குதப்பா
தமிழர் எம் உணர்வைத்தொடும்
மாவீர் நினைவுகள் .

சாட்டுக்கு சடங்காச்சு நேற்றோடு முடிஞ்சாச்சு . ஒப்புக்கு கூப்பாடு
எல்லோரும் அவர் பாடு .
மே வந்தால் அழுவோம் மெத்தனமாய் விலகுவோம் வீண் வம்பு எதற்க்கென்று
ஊர் மறந்து போனோம் . சாவுக்கு போய்வந்து
சன் t v க்குள் விழுவோம் சீரியல் கதையாய்
சீசனுக்கு ஒவ்வொன்று சிரத்தில் ஏறாமல் சிந்தைந்தனைக்கும் பூராம் மரத்துப்போனதடா
பாழ் படுவார் கல்லுமனம் .

குடி பேர்ந்த நாட்டின்
குடி மக்கள் ஆகிவிட்டோம். புலம் பெயர்ந்த கதையெல்லாம்
கனவென்று
மறந்து விட்டோம்.
விடுமுறைக்கு விடுதி விட குறைந்த விலை தேடுகையில் மலிந்த இடம் ஊர் .

விமானம் ஏறிவிட்டால் விலைவாசி தெரியாது
ஊர் வாசி மக்களின் உள்ளுணர்வு புரியாது .
தாய் மண் நிலம் என்று நினைப்பவர் கிடையாது சஞ்சலத்தை கூட்டும் என்ற பகுத்தறிவு கிடையாது
வந்த வழிக்கு
இலாபம் என்ன ?
திண்டு குடிச்சதும்
அரட்டை முடிச்சதும்
காசு கொழுப்பேறி ஊரைக்கெடுத்ததும் வெளிநாட்டு மோகத்தை வாரிவிதைத்ததும்
உள்ளூர் உளவியலை உணராமல் சிதைத்ததும் வெளிநாட்டு உறவென்னும்
நம் நாட்டு மக்களே .

வே.புவிராஜ் …

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert