நான் கொஞ்சம்
ஏழைதான்,
எங்கு பார்த்தாலும்
கண்ணீர்த் துளிகள்தான்.
கனவுகள் கரைசேர
துடித்தாலும் தடுப்பாய்
இருந்து துரத்தி
அடிக்கின்றன என் வறுமை!
பணம் இல்லை
எனப் பார்த்து
முகம் மறைந்துப் போனவர்
பலர் உண்டு என்
வாழ்க்கையில்!
நான் ஒன்றுக்கும்
மடிந்து போகவில்லை
வியர்வையினை வீசிவிடாது
வஞ்சகம் கொண்ட
மனிதர்களின் நடுவில்
மிச்சமாய் உண்ணுகிறேன்
இன்று வரை!
கவலையை நான்
கூறினால்!
காதடைத்துப் போய்
விடுவீர் என எண்ணி
மறைகிறேன் என்றும்
ஏழையாய் நான் இருந்து!
பொத்துவில் அஜ்மல்கான்