இன்றைய இன்பத் தமிழ்க் கவியரங்கில்
கவிவாணர் இரா சம்பந்தன் யேர்மனி
கவிஞர் வேதா இலங்கதிலகம் டென்மார்க்
கவிஞர் கலாநிதி க.மதிபாஸ்கரன் கனடா
கவிஞர் ஜென்னி ஐெயசந்திரன் பிரான்ஸ்
நான்கு பெரும் பாவலரும் சொற்சுவை சுந்தரிகளாய் நற்றமிழ் முற்றத்தில் நடனமாட வந்தார்கள் . ஒவ்வொரு கவிஞரையும் உற்று நான் பார்த்தேன் . அன்னை தமிழ்மொழியின் ஆழம் , அகலம் , நீளம் உயரம் என்ன என்ன என்பதனை அறியத் துடியாய்த்துடித்து , மூச்சடக்கி மூச்சடக்கி மூழ்கித் தேடித் தேடி எடுத்தவற்றை STS இன்பத் தமிழ் அரங்கில் எடுத்து இசைத்து மகிழ்ந்தார்கள் . சந்த நடை இருந்தது . தாள இசை இருந்தது சுந்தரத் தமிழ் உடுத்தியே சுற்றி நின்று பாடினார்கள்
வரலாறும் கற்பனையும் , வாழ்த்தொலியும் கேட்டது . ஒவ்வொருவர் தேடலிலும் ஒவ்வொரு சுவை இருந்தது . எல்லோரிடமும் நான் இனிய தமிழ் கற்றேன் . ஆற்றலுள்ள நம் புலவர்களை அறிமுகம் செய்து வைக்கும் அரங்கின் தலைமைக்கவிஞருக்கு அடியேனின்வாழ்த்துக்கள்
கவிஞர் முகில்வாணன்