நான்காவது ஐரோப்பிய தமிழ்
ஆய்வியல் மாநாடு
கடந்த 28- 09- 19, 29-09-19
திகதிகளில் முனைவர் திரு சச்சிதானந்தம் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாரீஸ் மாநகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு இலங்கை, இந்தியா, யேர்மனி, கனடா, சுவிட்சர்லாந்து, டென்மார்க், இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பல அறிஞர் பெருமக்கள் வருகை தந்து பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்
கடலென அறிஞர்கள் கூடிய அந்த
மாநாட்டில் ஒரு துளியென நானும்
கலந்துகொண்டு ‘தமிழும் டென்மார்க்
தமிழர்களும்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திருந்தேன்.
டென்மார்க்கில் இருந்து பிரபல
எழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்களும்
அவரது துணைவியார் எழுத்தாளர்
கலாநிதி ஜீவகுமாரன் அவர்களும்
மாநாட்டில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
எழுத்தாளர் ஜீவகுமாரன் அவர்கள் புலம்பெயர் இலக்கியம் என்பது ஈழ இலக்கியத்தின் நீட்சியா, டெனிஸ்- தமிழ்- ஆங்கில மருத்துவக் கையேடும் அகராதியும் என இரு கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தார். அங்கே சமர்ப்பிக்கப்பட்ட பல கட்டுரைகள்
எமது அறிவுப்பசிக்கு விருந்தாகின.
திருமதி கலாநிதி ஜீவகுமாரன்
அவர்கள் தனது நூலான ‘இப்படிக்கு அம்மா’வை தனது முன்னாள் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்களுக்கு மாநாட்டில் அன்பளிப்பாக வழங்கினார்.
அந்நிகழ்வில் இசை, நடனம், கூத்து,
நாட்டியநாடகமெனப் பல கலைநிகழ்வுகளும் அமர்வுக்களுக்கிடையே இடம்பெற்று
நிகழ்வைச் சிறப்பித்தன.
அந்த மாநாட்டில் ஊடகப் பிரபலங்களான. திரு ஜஸ்ரின் தம்பிராஜா, கே. பி. லோகதாஸ், தமிழ்நெஞ்சம் ஆசிரியர்
மற்றும் எனது பள்ளித்தோழி ராஜியையும் சந்தித்தது மிகவும் மகிழ்வை அளித்தது.
பல்துறை அறிஞர்களின் நல்ல
சந்திப்பாகவும் பல்வேறு விடயங்களைக் கற்கும் இனிய நாட்களாக அவ்விரண்டு நாட்களும் நிறைவுபெற்றது.
– நக்கீரன் மகள்