நாட்டுக்கூத்து கலைஞர் திரு. தம்பு பழனிஅவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.

பாரிஸ் பாலம் படைப்பகத்தால் 05.05.19அன்றுத
தாயகத்தில் மூத்த நாட்டுக்கூத்து கலைஞர் திரு.
தம்பு பழனி அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.
வடமராட்சி கரவெட்டி மேற்கு பிரதேசத்தில் இடைக்குறிச்சி என்ற இடத்தை சேர்ந்த நாட்டுக்-கூத்து மூத்த கலைஞர் கலைச்சுடர் தம்பு பழனி அவர்கள் இடைக்குறிச்சியில் அமைந்துள்ள „அம்மா அறிவகம் „கட்டடத்தில் வைத்து பிரான்ஸ்) பாரிஸ் பாலம் படைப்பகத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கரவெட்டி மேற்கு சமுர்த்தி அதிகாரி மதிப்பிற்குரிய திரு.K.குகேந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நாட்டுக்கூத்து மூத்த கலைஞர் திரு.தம்பு பழனி அவர்களை பொன்னாடை போர்த்து கௌரவித்ததோடு பாரிஸ் பாலம் படைப்பகத்தின் கலைஞர்களை காப்போம் கலையை வளர்ப்போம் என்ற தாரக மந்திரத்திற்கு அமைவாக சிறிய அன்பளிப்புத் தொகையையும் வழங்கி கௌரவித்திருந்தார்.

கலைப் பயணத்தில் திரு.தம்பு பழனி அவர்கள் 1960 களில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பவர். 300க்கு நாடகங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக „காத்தவராயன் “ சாரங்கா “ „சத்தியவான் சாவித்திரி“போன்ற நாடகங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று விளங்கியவர் என்பது இவரது ஆளுமை க்கு சிறப்புச் சேர்ப்பவை.

இவ் கௌரவிப்பு நிகழ்வில் வன்னியில் வாழ்ந்த தாயகக் கலைஞர் கரவை புத்திரன் அவர்களும் கலந்து இவரது சிறப்புக்களை எடுத்துரைத்தார்.

பாரிஸ் பாலம் படைப்பகத்தின் தாயகக்கலைஞர் கௌரவிப்பு நிகழ்வினை கரவெட்டி மேற்கு மகளீர் மன்றத்தின் தலைவி அருமைத்துரை சறோசாளினி அவர்கள் முன்நின்று நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் பாலம் படைப்பகத்தின் தாயகக் கலைஞர்கள் மற்றும் துறைசார்ந்த ஆளுமைகள் கௌரவிப்பில் இரண்டாவதாக கௌரவிப்பை கலைச்சுடர் திரு.தம்பு பழனி அவர்கள் பெற்றுள்ளார்கள்.
ஏற்கனவே 23.03.19 அன்று பாரிஸ் பாலம் படைப்பகத்தால் முதல் மதிப்பளிக்கப்பட்டவர் „ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ் போன்று 250 க்கு மேற்பட்ட காவியப்பாடல்களை எழுதிய திரு.செல்லக்குட்டி அவர்கள் என்பது நீங்கள் அறிந்ததே ::
தொடர்ந்து நீண்ட காலம் தாயகத்தில் வாழ்ந்து கலை இலக்கிய, மற்றும் துறைசார்ஆளுமைகள் கலைஞர்களை காப்போம் கலையை வளர்ப்போம் „என்ற வேலைத்திட்டத்தினூடக தொடரும். ::
அதேவேளை( நாங்கள்)பாலம் படைப்பகம் கடந்த காலங்களிலிருந்து தாயக மக்களுக்கான வழங்கி வரும் உதவிகளை பொதுவெளிக்கொண்டு வருவதை தவிர்த்தே வருகிறோம் என்பது நீங்கள் அறிந்ததே ::நன்றி.
(K.P.L)