நறுக்குகள்

கடிகாரத்திற்கு சரியான நேரத்தை மட்டுமே காட்டத் தெரியும் அதை நல்லநேரமாகவும்.கேட்ட நேரமாகவும் மாற்ற மனிதனால்தான் முடியும்..

கைரேகையை பார்த்தே உங்கள் எதிர்காலத்தை கணித்துவிட முயல்வது முட்டாள்தனம்.மூடநம்பிக்கை.ஏனென்றால் இங்கு கைகளே இல்லாதவர்கள்கூட சாதித்து வாழ்கின்றார்கள்.அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.

அதிகம் படிக்கவில்லை என நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. நம் மரணம்வரை வாழ்க்கை தினமும் நல்ல பாடங்களை கற்றுத்தரும்.

அடுத்தவரோடு எம்மை நாம் ஒப்பிட்டு நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்கின்றோம் அது வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரத்தில் சுழலும் நாம்,நமக்கு நிகர் நாமே என்று எண்ணுவோம்.

தோல்வி என்பது வாழ்கையை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றேதவிர அதில் அவமானங்கள் இல்லை.

கோவிலூர் செல்வராஜன்