நடிகர் சூரியா- ஜோதிகா தயாரிப்பில் வெளியாகவுள்ள Oh My Dog’ திரைப்படத்தில் வரும் ”It’s My Kinda Day” என்னும் பாடலைப் பாடிய கனடா வாழ் குட்டிப் பாடகர் அஜீஸ் அவர்களுக்கான பாராட்டு விழா ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று 6ம் திகதி கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது.
1686 Ellesmere Road , Scarborough, Ontario (Ellesmere and McCowan0 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள JC’s Banquet & Convention Centre மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவில் பல பிரமுகர்கள் உரையாற்றவுள்ளார்கள். குட்டிப் பாடகர் அஜீஸ் அவர்கள் ஏற்கெனவே சில திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அஜீஷ் சிவகுமார் கனடாவில் பிறந்து வளர்ந்து வரும் இளம் பாடகன் அண்மையில் தென்னிந்திய திரைப்படமான “oh my dog “இல் தன் முதலாவது பாடலான “its my kinda day” என்ற பாடலை இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவின் இசையில் பாடி சிறிய வயதில் பின்னனிபாடகன் ஆனார்.
அவர் தன் 4 வயதிலிருந்தே மேற்கத்திய இசையை கற்றும் பின்பு கர்நாடக இசையை கற்றும் வருகிறார். இவருக்கு வாத்தியகருவிகளிலும் மிக ஈடுபாடு இருப்பதால் டிரம்ஸ், பியானோ மற்றும் கிட்டார் கற்றுவர பெற்றோர் மிகவும் ஆதரவு வழங்கிவருகிறார்கள். இவரின் பலம் என்றால் அது அவர் இசைமேல் வைத்திருக்கும் அதிக ஈடுபாடும் விடாமுயற்சியும் அதற்கு முற்றிலும் ஊக்கமும் ஆதரவும் கொடுக்கும் பெற்றோரும் ஆகும்.
மிக அண்மையில் இரண்டு் independent songs வெளியிட்டுள்ளார் …
அவையாவன:
– “ஆகாய நீலமே” உத்தரா உன்னிகிருஷ்ணன் அவர்களோடு.
– “ஏலசா”- தனிப்பாடல்
இரண்டு பாடலுக்கான இசை: ஶ்ரீ்ஜய் ராகவன்- Sril Vijay
சிறு வயதிலே எண்ணற்ற மேடை அனுபவம் கிடைக்கபெற்றார். கடந்த 7 ஆண்டுகளாக பல இசை நிகழ்ச்சிகளில் உற்சாகத்தோடு பங்கேற்று தனது இசைத்திறனை முழுமையாக வெளிக்காட்டி பலர்பாராட்டை பெற்றுள்ளார். மேடையில் தைரியமாக நின்று பாடும் அனுபவமும் பல அருமையான வாய்ப்புக்களும் பல இசைப்போடிகளில் கலந்துகொண்டதால் இவருக்கு அமைந்தது.
அவை:
– பாரதி கலை பாடவா பாடவா 2018
– சுருதி இசைப்போட்டி
– நினைவுகள் 2018
-Hidden Talent Canada Vocal Competition
– London IBC தங்க குரல் 2018
– Super Singer Vijay Tv 2019
உலகெங்கும் நடைபெற்ற இசைப் போட்டிகளில் குறிப்பாக அவர் லண்டன் சென்று பங்கேற்ற ஐபிசியின் தங்க குரலில் முதல் 30 இடங்களைப் பிடித்து மேலும் அவர் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கபட்டு அதிலே அவருக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் திரைப்படத்தில் பாட வாய்ப்பு வழங்குவதாக உறுதிப்படித்தினார்.
தற்போது அந்த பாடலுக்கான அனைத்து வேலையும் முடித்து பாடல் வெளியிட்டை எதிர்பார்த்து இருக்கிறார். இந்த பாடல் SPB Charan அவர்களுடன் இணைந்து பாடியது மிகவும் குறிப்பிடதக்கது. பாடசாலை நேரம் தவிர மீதி நேரம் இசை வகுப்புக்கள் , இசை நிகழ்ச்சி , மனம் விரும்பிய பாடல் பதிவு செய்து இணையதளத்தில் இடுவது , இசை நேர்காணல் என இசையோடேஅதிக நேரம் செலவிட்டுவருகிறார்.
இவரின் பாடும் திறன் அடையாளம் கண்டு Canada வில் பல முண்ணனி இசைக்குழுவினர்கள் இசை ஒருங்கிணைப்பாளர்கள் இவரை பல மேடை நிகழ்ச்சிகளில் Cinema பாடல் / பக்தி இசை பாடல்கள் பாடும் வாய்ப்புகளை அளித்துவருகிறார்கள்.
பாடல் பாட எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு தூரம் அவர் பயிற்சியும் எடுத்துக்கொள்வார். Western பாடல், கர்நாடக சங்கீதம், பக்திப்பாடல், திரைஇசைப்பாடல் என எந்த பாட்டை எடுத்தாலும் அதன் தன்மை மாறாது பாட முயற்சிப்பது , ரசிக்கும் படி பாடுவது தாரஸ்தாயில் பாடும் ஆற்றலை பெற்றது பாவத்தோடு (Bhaavam) பாடுவது மற்றும் தைரியமாக பாடுவது இவரது தனித்துவம் ஆகும். தனக்கு கிடைத்த பாடும் திறனை கொண்டு பலரை மகிழ்விக்க வேண்டும் தமிழ் மகனாக தன் குடும்பத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இசைமூலம் பெருமை தேடித்தரவேண்டும் என பெரிய கனவோடு் இவர் தன் இசைப்பயணத்தை.தொடர்கிறார்.
குட்டிப் பாடகர் அஜீஸ் அவர்கள் இசைத்துறையில் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்று கனடா உதயன் ஊடகக் குழுமம் வாழ்த்துகின்றது.