யேர்மனி முன்சர் நகரில் நடன ஆசிரியய் அமலா அன்ரனியின் நிருத்தியநாட்டியாலய நடனபள்ளியின் முத்தான முப்பது ஆண்டுகளைக் கொண்டாடியுள்ளது இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்ற பலரது உழை!
ப்பும் பயில் கலை மாணவர்களின் சிறப்பும் ஆசிரியர் கற்றுக்கொடுக்கும் விடயம் எவ்வளவு முக்கியமோ அதைவிட அந்த ஆசிரியரிடம் காணப்படும் இதரவிடயங்களைத் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் இயல்பு மாணவர்களிடம் இயல்பாகக் காணப்படும். அந்த வகையில் நடன ஆசிரியய் அமலா மாணவர்களில் 90 சதவிகிதமான மாணவர்கள் உங்கள் பிரதியாகக் காணப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு ஆசானைக். குருவை. அம்மாவை. தோழியை.
எனது மகள் பென்சியாவிற்குக் காட்டிய இறைவனுக்கு நன்றிகள் பல.
உங்களின் உடை , உங்களின் பவ்வியமான நடை,உங்களின் இனிமையான காந்தக்குரல்,
எந்த நேரத்திலும் மாறாத புன்னகை,
எல்லா மாணவர்களையும் பாரபட்சம் இன்றிப் பார்க்கும் நேர்த்தியான பார்வை,
நல்ல வார்த்தைகளைத் தேடித்தேடிப் பேசும் அலங்காரப் பேச்சு, மொத்தத்தில் எல்லோரும் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம். இன்னும் பல நுறாண்டு வாழ்க வளமுடன்