திருத்தம் உண்டாகட்டும்
மன திருப்பம் உண்டாகட்டும்
மன அழுத்தம் நின்றாகட்டும்
புது இணக்கம் உண்டாகட்டும்
எதுக்குவந்தோம்
என்ன எடுத்துச்செல்வோம் எனக்கு என்றும்
உனக்கு என்றும் இருப்பதென்ன ?
இதில் நான் பெரிது
நீ பெரிது என்ற மயக்கம்மென்ன ?
கூடவே இருந்தாலும்
குடை பிடித்து நின்றாலும்
போகும் பாதைக்கு
வழித்துணை யாரும்மில்லை .
வந்தவர் தங்கிடும்
வசதிகள் வாய்த்ததில்லை .
இன்னும் வாழ்கிறார் சிலர்
இயற்கை அழைத்ததில்லை .
புறம் தள்ளி மறைத்ததில்லை.
மானுடரில் மகான்களை
மரணம் மாய்க்காது.
புலரும் தை திருநாளில்
எல்லோரும் மகானாக வாழ எத்தனிப்போம் .
இல்லையேல் மனிதனாக வாழ முடிவெடுப்போம் .
எல்லோருக்கும் இனிய தமிழர் தைத்திருநாள்
நல் வாழ்த்துக்கள் .
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க …
வே.புவிராஜ் …