மகாஜனாக் கல்லாரியின் பழைய மாணவி.பாரிஸ் தமிழர் கல்வி நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர்.சிறந்த விளையாட்டு வீராங்கணை.கூடைப்பந்தாட்டத்தில் கல்லூரிக் காலங்களில் சாதனைகள் நிகழ்த்தியவர். நேரத்தை மதிக்கும் முதன்மையான பெண் என்பது தனிச் சிறப்பு.…
இவரைப் பற்றிக் கூறுவதற்கு முக நூலில் பக்கங்கள் போதாது.
கணவர் ஜெயக்குமாரின் முழுமையான ஆதரவோடு முப்பது வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் இன்று வரை செயல் படும் ஒருவர்.பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகத்தில் நாடகத்துறையில் நீண்டகாலமாக இயங்கி வருபவர்.ஆரம்ப காலங்களில் நிலவிய நடிகையர் தட்டுப்பாட்டினை முறியடித்து அரங்கேறிய பெண்களில் முக்கியமானவர்.
எனது நாடகக்கலை வாழ்வில் மறக்க முடியாத முக்கிய பங்காளியாவார்.பல நூறு மேடைகளுக்கு மேல் என்னோடு பயணித்தவர் பயணிப்பவர்.ஐரோப்பா அமெரிக்கா எனக் கண்டங்கள் தாண்டியும் கலைச் சேவை புரியும் தனித்துவமானவர்..
வினோத உடைப்போட்டிகள்.தனி நடிப்பு மற்றும் நாடகங்கள்.பட்டிமன்றங்கள்.கவிதைகள் என பல் துறைகளிலும் பங்கு பற்றி சிறப்பிக்கும் ஆற்றலுடையவராவார்.பிரதிகளை மனனம் செய்வதிலும் பாத்திரங்களாக மாறி விடுவதிலும் இவருக்கு நிகர் இவரே..குறும்படங்களில் நடிப்பது மட்டுமன்றி ஐரோப்பிய ரீதியில் நடை பெறும் போட்டிகளிலும் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
பழநெடுமாறன் ஐயா.வே.பாலக்குமாரன்.புதுவை இரத்தின துரை அவர்களின் நேரடியான பாராட்டைப் பெற்றவர்.ஏபிசி வானொலியிலும் பணியாற்றியவர்.ரிரிஎன் தொலைக்காட்சியில் வணக்கம் ஐரோப்பா எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.அதே தொலைக் காட்சியில் எனது இயக்கத்தில் குடும்பம் எனும் தொடரிலும்.ஐபிசி தமிழ் தொலைக் காட்சியில் புரோக்கர் பொன்னம்பலத்திலும் நடித்து ஊடகங்களை வளர்த்ததில் முக்கியமான பெண்ணாவார்.கலைப்பற்றும் கொள்கைப் பிடிப்பும் நிறைந்தவர்.சதிகள் பொறாமைகள் எனும் சகதிக்குள் சிக்காதவர்.நியாயமான நம்பிக்கையான நட்சத்திரமாவார். தாயக நேசிப்பிலும் உதவிகளிலும் தீவிரமாகச் செயல் பட்டு வருபவர். கலைஞர்களால் நடாத்தப்பட்ட கலைக்களரி எனும் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான குழுக்களில் பிரதான அங்கத்தவருமாவார்.இவரது அனைத்து வெற்றிகளுக்கும் இன்றுவரை உறுதுணையாக இருந்து வரும் திரு ஜெயக்குமார் அவர்கள் பாராட்டப்படவேண்டியவராவார்.இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் தனது அனைத்துக் கடமைகளோடும் கலையை நேசிக்கும் சிறப்பினை பாரட்டாமல் இருக்க முடியாது.புலம் பெயர்ந்த எம் பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமானவரை வாழ்த்துவோம் வாருங்கள்.வாழிய வாழியவே திருமதி லீனா ஜெயக்குமார்..