தாய் நிலம்.!கவிதை

 

பார்வையில்
படுவதெல்லாம்
இன்று பட்டுப்
போன எங்கள்
மனங்களில்
ஏக்கங்களால்
தாக்குகின்றன.

எல்லாம்
பறி போயும்
எம் தேச நினைவும்
உணர்வும் பச்சை
பசீராகவே……..

விதைத்தவனும்
இல்லை .விதை
நிலமும் இல்லை.
குந்திய குடிலும்
கும்பிட்ட கோவில்
குளமும் இல்லை..

எங்கள் வாழ்வு
போல் எல்லாமே
காட்சிப் பொருளாகி
கண் காட்சி அரங்கில்
அலங்காரமாச்சு.

வெளி நாட்டு
அங்காடிகளில்
கொள்வனவாகும்
தாய் நிலத்து
மரக்கறிகள்
ஊர் நிலத்தில்
வாழும் உறவுகளை
எண்ணிய படி
ஏதோ சொல்கின்றது.

ஆக்கம் கவிஞர்தயாநிதி