தாயகப்பாடகர் சுகுமார் அவர்குளுக்கு கௌரவம் வழங்கலுடன்.பாரிஸ் நகரில் மாபெரும் இசைநிகழ்ச்சி.13.01.2019

 

„மாவீரர் யாரோ என்றால்“,நிலவில் புதிய கவிதை எழுத“, நித்திரையா தமிழா“,ஆதித்தன் கரும்புலி வீணை“,தென்தமிழீழமும் எங்களின் கையிலே“,வீரத்தின் தாகம் தணியாது“,ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா“,காற்றில் கலந்த கடற்கரும்புலிகள்“,என ஆயிரக்கணக்கான கானங்களை எம் காவிய நாயகர்களுக்காகவும் எம் தேசத்தலைவனுக்காகவும் போற்றிப் பாடியவர், ,,,, ஈழத்தில் சாந்தன்,சுகுமார் இல்லாத மேடை ஒரு மேடையல்ல என்னும் அளவிற்கு குரல்வளத்தாலும் தங்கள் நகைச்சுவையாலும் நடிப்புகளாலும் எம் தேசத் தலைவன் உட்பட, போராளிகள் , மக்கள், என, அனைவரினதும் மனங்களில் நிறைந்த தேசத்தின் போர்க்குரல்களில் ஒன்று , இன்று தன் தாய் உறவுகளை நாடி வந்துள்ளது.. வருக வருக எம் ஈழக்குரலே!!!

13.01.2019 பாரிஸ் நகரில் மாபெரும் இசைநிகழ்ச்சி.
தாயகத்தில் இருந்து சிறப்பிக்க வருகிறார் தாயகப்பாடகர் சுகுமார் அண்ணா அவர்கள்.. அவரைக்கெளரவிக்க உங்கள் அனைவரையும் வருக வருக  இந்தநிகழ்வில், சுவிஸ் நாட்டின் புகழ்பூத்த இசையமைப்பாளர் ஐவறி அவர்களின் இசையில் பிறின்சி,  அம்முவும், கம்பீரக்குரலோன் சந்திரமோகன்,இசைப்பறவை கரோலின், முல்லைசசி, இன்னும் பல பாடகர்கள் கலந்துகொண்டு பாடல்கள் தரவுள்ளோம்.. வாருங்கள் உறவுகளே! ! இது உங்கள் குரல்களின் ஒன்றிணைவு..