நான் விரும்பும் இக்கலையை நேசிப்பதால், அதை நேசிக்கும் என்னை நேசித்து என்னை தட்டிக் கொடுத்து வளர்க்கும் எம் சினிமா ஆர்வலருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்…
விடயம் –
தங்களைப் போலவே என்மேல் அக்கறை கொண்ட அன்புச் சகோதரர்கள் என்னுடைய படத்துக்கான போஸ்டர்களை தமது ரசனைக்கு ஏற்றது போல தயாரித்து விட்டிருக்கிறார்கள். அதில் சில போஸ்டர்களில் யாழ்ப்பாணத் தமிழில் என வருகிறது இதை வைத்து நான் பிரதேசவாதம் தெளித்ததாக அன்புச் சகோதரர்கள் இன்பொக்சிலும் போனிலும் என்னை நேரடியாக கடிந்து (உரிமையோடு) கொண்டார்கள்.
உண்மையை ஏற்றுக் கொண்டேன் ஒரு நேர்மையான கலைஞன் என்பவன் அந்த இனத்துக்குரிய பொதுச் சொத்து என்று ஒரு அண்ணன் சொன்னது என் காதில் திருப்ப திருப்ப ஒலித்துக் கெண்டிருக்கிறது.
உண்மையில் படத்தின் official poster செய்த puppeteer studio வின் போஸ்டர்களில் உங்கள் மொழி பேசும் உங்கள் ஊர்த் திரைப்படம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதை விட பிரதேச ரீதியாகவும் படத்தில் இரண்டு பேர் திருகோணமலை சார் உச்சரிப்பும் ஒருவர் வவுனியா மண் சார் உச்சரிப்பும் உள்ளடக்கபட்டிருப்பதை கவனத்தில் கொள்ளவும்.
போஸ்டர் செய்த சகோதரர்களும் வேண்டும் என்று பிரதேச ரீதியாக அதை ஒப்பிட்டுக் குறிப்பிடவில்லை இங்கு சினிமாவுக்கு என்றொரு வேற்று நாட்டு சார் மொழி தொடரப்படுவதால் அதை வேறு பிரித்துக் காட்டவே அப்படிக் குறிப்பிட்டார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
இன்றைய காட்சிகளாக யாழ் ராஜா திரையரங்கில் 2.30 , 4.30, 6.30 காட்சிகள் திரையிடப்படுகிறது.
திரைப்படத்துக்கான ஊடக அனுசரணையாளர்.
இலத்திரனியல் ஊடகம் – டான் தொலைக்காட்சி
அச்சு ஊடகம் – எதிரொலி
இணைய அனுசரணை – Tube tamil
எதிரோலி பத்திரைிகையால் நடாத்தப்பட்ட போட்டியில் வென்றவருக்கான இலவச நுழைவுச்சீட்டுக்கள் இன்று திரையரங்க வாசலில் கையளிக்கப்படும்