தமிழ் வானொலி வரலாற்றில் எம்.பீ.கோணேஸ் குடும்பம் ஐரோப்பாவில் சிறப்பாக 24 மணிநேர வானொலியை நடாத்திய எம்.பி.கோணேஸ் பற்றி பிரான்ஸ் இல் இருந்து அதிபர் விசு செல்வராசா
1995ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். அப்போது பிரான்சில் இருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்து இருந்தது. அதுவூம் அந்த விளம்பரம் கனடாவில் இருந்து வந்திருந்தது. என்னவென்று பார்த்தால் கனடாவில் இருந்து ஐரோப்பா முழுவதும் மற்றும் ஆபிரிக்க நாடெங்கும் ரேடியோ ஆசியா கனடா தமிழ் ஒலிபரப்பை செய்ய இருப்பதாகவூம் அந்த வானொலிக்கு ஐரோப்பிய நாடெங்கும் பிரதிநிதிகள் தேவை என்றும் முழுப்பக்க விளம்பரம் வெளியாகி இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ் வானொலிகளோ தமிழ் தொலைக்காட்சிகளோ இணைய தளங்களோ இல்லாத காலம் அப்படியான காலத்தில் இப்படி ஒலி பரப்பு நடக்க இருக்கின்ற செய்தியறிந்து மிகவூம் மகிழ்ச்சடைந்த நான் பிரான்சின் பிரதி நிதியாக செயற்பட விரும்பி உடனடியாகவே எனது விருப்பத்தை தெரிவித்தேன். ரேடியோ ஆசிய நிறுவனமும் என்னை பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டது. அப்போது இந்த நிறுவனத்துக்கு சொந்தக்காரர் எம்.பி. கோணே~; என்பது எனக்கு தெரிந்த பின் ஒரு மாபெரும் கலைஞருடன் சேர்ந்து அதுவூம் ஒலிபரப்புத் துறையில் பணியாற்ற போகிறௌம் இது தவிர உனக்கு தெரியூமா நான் உன்னை நினைப்பது என்கின்ற அற்புதமான பாடலுக்கு சொந்தக்காரர் அந்தப் பாடலைஇசைத்தட்டாக்கி இலங்கையில் முதன் முதலாக வெளியான தமிழ் இசைத்தட்டு என்கின்ற பெருமைக்கு சொந்தக்காரர் இப்படியான ஒருவரின் நிறுவனத்தில் நானும் இணைந்து கொள்ள போகிறௌம் என்று நினைத்த போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இப்படியான ஒரு நிலையில் லண்டனில் இருந்து வெளி வரும் ஒரு பத்திரிகையில் லண்டனில் உள்ள ஒரு மூத்த அறிவிப்பாளர் மேற்படி ஒலிபரப்புப் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். கனடாவில் இருந்து ஐரோப்பாவூக்கும் ஆபிரிக்காவூக்கும் தமிழ் ஒலி பரப்பா இது இலங்கையில் உள்ள கிராமத்தில் கொக்கைதடியில் ஏரியல் கட்டி வானொலி கேக்கின்ற நினைப்பா இது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை என்று கிண்டலாக அந்தக் கட்டுரை அமைந்திருந்தது.
இது எனக்குச் சற்றுக் கலக்கமாக இருந்தாலும் பிரான்சில் ரேடியோ ஆசியா கனடாவின் பிரான்சு கலையகம் அமைக்கும் வேலையை நம்பி மகேசனுடனும் எனது நண்பர் சிவானந்தனுடனும் சேர்ந்து ஆரம்பித்தேன்.
இந்த நிலையில் பல ஆயிரம் டொலர்கள் செலவில் மேற்படி வானொலி மிகவூம் துல்லியமாக சிறப்பாகத் திட்டமிட்டபடி ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் ஒலிபரப்பானது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வகையில் ஐரோப்பாவில் முதன் முதலாக செய்மதியில் வானொலி ஒலிபரப்பை செய்தவர்கள் என்ற பெருமை திரு.கோணே~; அவர்களுக்கும் இவரது குடும்பத்தினருக்குமே சாரும்.
இதனைவிட ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாட்டுக்கும் நேயர்கள் நிகழ்ச்சியில் தொடர்பு கொள்ள இலவசமாக தொலைபேசி இணைப்பை அன்றில் இருந்து இன்றுவரை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் என்ற பெருமையூம் திரு.கோணே~; அவர்களுக்கே சாரும் என்று கூறுவதில் பெருமையடைகின்றேன்.
இதுமட்டுமன்றி இன்று கனடாவில் இருக்கிற பல அறிவிப்பாளர்களை உருவாக்கி விட்டு அமைதியாக இருக்கின்ற திரு. கோணே~; அவர்களின் எண்ணமும் செயலும் சிந்தனையூம் வானொலியின் ஒலிபரப்பு சிந்தனையிலே இருந்து இருக்கிறது என்பதை இன்றுவரை அவரின் செயற்பாடுகள் எனக்கு உணர்த்தி நிற்கின்றன. அது மட்டுமன்றி நானும் இன்று ஒலிபரப்புத் துறையில் பெரும் பேரும் புகழும் பெற்று பிரான்சில் இருக்கும் நான் குறிப்பாக கனடா மொன்றியல் மக்களின் மனதில் நான் இருக்கிறேன் என்றால் அதற்குப் பாலம் அமைத்து எனக்கு வழி காட்டி என்னை ஒலிபரப்புதுறையின் உச்சத்துக்கு அழைத்துச் சென்றவர் திரு.கோணே~; என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமையூடன் கூறிக் கொள்வேன்.
புலம் பெயர்ந்தவர்கள் பொருள் தேடுவதிலும் தமது வாழ்வை வழப்படுத்துவதிலும் இருக்கிற வேளையில் தனது உழைப்பு அத்தனையூம் வானொலிக்காக செலவிட்டு இன்னும் வானொலி துறையை விரிவாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கம் இவரது செயலுக்கு வடிவம் கொடுக்கிற ஒருவரை இங்கு நான் குறிப்பிட வேண்டும்.
வானொலிக்கு தொழில் நுட்பம் என்பது மிக முக்கியமானது. பிராந்திய கலையகங்களை இணைப்பது ஒலி பங்கீடு இணைப்பு ளநசஎநச இலவச தொலைபேசி இணைப்புகள் இணையதளம் என்று தனது சிறு வயது முதல் இன்றுவரை தொழில்நுட்பத்தில் சிறப்பாக பணியாற்றி சிர்வதேச தமிழ் வானொலியில் தொழில் நுட்பவேலைகளைச் சிறப்பாகச் செய்து வருகிறவர் திரு. பிரதீப். இவரின் தொழில் நுட்ப திறமையின் காரணமாக தான் இன்று நேரடி ஒலிபரப்புகளை நாங்கள் இருந்த இடத்தில் இருந்து செய்கின்ற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள சில வானொலிகளில் இவரிடம் இருந்து கற்றுக் கொண்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது நான் அறிந்த விடயம்.
குறிப்பாக 1998ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திகதி எனக்கு ஞாபகம் இல்லை. இலங்கையில் 50 வருட குடியரசு கொண்டாட்டம் இடம் பெற்றுக் கொண்டு இருந்த வேளை உலக நாடகளில் பல இடங்களில் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒரே நாளின் முன்எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வூகளை எந்த வானொலியூம் எடுத்து வராத வேளை ரேடியோ ஆசியா கனடா இந்த நிகழ்வை வானொலிக்கு எடுத்து வந்தது. அது மட்டும் அன்றி பிரதீப்பின் முயற்சியினால் அமெரிக்காவில் இருந்து பாஸ்கரன் என்பவரும் சுவிஸ் நாட்டில் இருந்து சர்மாவூம் பிரான்சில் இருந்து நானும் லண்டனில் இருந்து விஜயன் என்பவரும் ஒரே நேரத்தில் இந்த நிகழ்வை வானலலைக்கு எடுத்து வந்தது மட்டும் அன்றி நாங்கள் அனைவரும் ஒரே தொடர்பில் இந்த நிகழ்ச்சியை வானலைக்கு எடுத்து வந்தது அந்தக் காலத்தில் பலராலும் பேசப்பட்ட விடயம் என்பதை நினைக்கும் போது பரதீப்பின் தொழில் நுட்ப திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.
இதே போல் சர்வதேச தமிழ் வானொலியின் நேயர்களை வருடத்தில் ஒருமுறை இணைத்து உணவூம் பரிமாறி கலை நிகழ்ச்சிகளையூம் நடத்துகின்ற பெருமைக்குரிய குடும்பமாக இவர்கள் திகழ்வதுடன் மொன்றியால் நகரில் முதன் முதலாக ஒலிம்பிக் மைதானத்தில் பிரமாண்டமான வசந்த விழாவை நடத்தியவர்கள் என்ற பெருமையூம் இவர்களுக்கே உரித்தானது.
இன்று உலக வான் பரப்பில் பல்லாயிரக்கணக்கான நேய நெஞ்சஞ்களை உள்வாங்கி அசையாக அசைக்க முடியாத ஒரு வானொலியை நடத்துகின்ற கலைஞர் திரு.கோணே~; பாராட்டுகின்ற ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவரின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கின்ற திருமதி.பத்மினி அவர்களை இங்கு குறிப்பிடவேண்டும். எது சரி எது தப்பு என்பதை சரியாகத் தெரிந்து கொண்டு மற்றவர்களின் மனம் புண் படாதவாறு அதைப் பண்போடு சுட்டிக் காட்டுகின்றவர் தனது இனிய குரலாலும் இனிய பேச்சாலும் நேயர்களை கவர்ந்த பண்பாளர். எனது மரியாதைக்குரியவர் சமுதாய சீர் திருத்த நிகழ்வூகளை வானலையில் எடுத்து வருகின்றவர். நல்ல சிந்தனையாளர். இவரின் பொது மேடை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வருவது வானொலித்துறையில் இவருக்கு கிடைத்த பெற்றி என்று குறிப்பிடலாம்.
வானொலி துறையில் அடிக்கடி வழுக்கி விழுந்த போதும்இ துணிச்சலோடு எழுந்து நிற்க திரு.கோணே~; நிற்கும் அன்புச் சகோதரி பத்மினியை இந்த வேளை அன்போடு நினைத்துப் பார்க்கிறேன்.
இன்று பிரான்சில் ஒரு வானொலிக்கு நான் சொந்தக் காரனாக இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணமும் திரு.எம்.பி.கோணே~; அவர்களும் அவரது மகன் பிரதீப் ஆகியோரே காரணம் என்று கூறுவதில் நான் பெருமையடைகின்றேன்.
கடந்த இருபது வருடங்களாக எங்களின் உறவூ குடும்ப உறவாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதே உறவோடும் உரிமையோடும் மாபெரும் கலைஞன் எம்.பி.கோணே~; அவர்களின் கலைப்பணி சிறக்கவூம் அவரின் உயரிய நோக்கம் வெற்றி பெறவூம் வானொலி வரலாற்றில் இவர் இன்னும் வெற்றி வாகை சூடவூம் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
அன்புடன்
சரவணையூர் விசு செல்வராசா
சர்வதேச தமிழ் வானொலி பிரான்சு
உலக தமிழ் பண்பாட்டு இயக்க உலகப் பொருளாளர்