உலகின் மூத்தமொழியே
எம் தாய்மொழியே வணக்கம்
உன்பெருமையை உலகமே அறியும்
வியந்து போற்றிப்பாராட்டும்
அறிஞர்களும் ஆழ்வாளர்களும்
ஆராய்ந்து அறிந்து
தமிழே தொன்மை மொழி என்றே
வரலாற்று ஏட்டில்பதிந்தார்
ஆனால் இன்றோ தமிழனே
தமிழைப்பேசாமல்
தரங்கெட்டுப்போறான்
ஊரோடும் உறவோடும்
உரையாடும்போதே
ஆங்கிலம் கலந்து பேசுகிறான்
படித்தவன் என்ற எண்ணமோ
அப்படிப்பேசுவதே பெருமை
என்ற நோக்கமோ
வீதியோரப்பலகையிலும்
வணிக நிலையங்களிலும்
விளம்பரப்பலகையில்
தமிழே இல்லை
தமிழ்த்தொலைக்காட்சியிலும்
தமிழை உச்சரிக்கவே தெரியாமல்
தமிழே தவிக்குது தத்தழிக்குது
தமிழ்த்தாய் பெற்றெடுத்த
பிள்ளைகளே தாயை மம்மி என்பதும் கொடுமையிலும்கொடுமை
நாகரீகம் என்று நம்தமிழை நாமே அழிக்கின்றோம்
நாம் வணங்கும் கடவுளுக்கும்
தமிழே தெரியாது
சமஸ்கிருதம்தான் தெரியுமாம்
தெரியாதமொழியிலே
எது ஓதினாலும் ஏமாந்து
அரோகரா சொல்லியே
ஏமாந்துபோகிறோம்
சங்கம் வைத்தே தமிழைக்காத்தோமே
இன்று அன்னியமொழியின்
ஆதிக்கத்தால் அவதிப்படுகிறது
பண்பாடுமாறுது பழக்கம்மாறுது
நாகரீகம் என்று நம்இனம் அழியுது
இதைத்தெரியாமல் நாம் உறக்கிக்கிடக்கலாமோ
வெளிநாட்டு மோகத்தில் வாழ்வைத்தொலைக்கின்றோம்
எம் ஊருக்குள்ளும் நுளையப்பாக்குது
ஆட்சியில் இருப்பவர்க்கு பதவியும் கதிரையும்தான் முக்கியமாச்சு இனத்தைப்பற்றியோ எம்தாய்மொழியைப்பற்றியோ
அக்கறையில்லை
மாலையும் மரியாதையும் பண்மும்
போதும் என்றே வாழ்கின்றனர்
தமிழ்மொழியே என் தாய்மொழியே
உன்னைக்காப்போம் வாழ்கதமிழ்
தாய்மொழி நம்தமிழ்மொழி
நம்தமிழ்காக்கவே
விழித்திடுதமிழா விழித்தெழுதமிழா
தாய்மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்துவிடும் உணர்ந்துகொள்
நாம் தமிழர் என்றே உணர்வுகொள்
தாய்மொழி கற்போம்
தாய்மொழி காப்போம்