தமிழா நீ தமிழால் பேசு
தாய்மொழி பேச தயங்காதே
தரணியில் எவ்மொழி கற்றாலும்
தமிழின் இனிமை எதிலுண்டு??
தமிழை உயிராய் நீ நேசி
தாய்மண்ணை நீ சுவாசி
தேசங்கள் பல கடந்தாலும்
நேசத்தோடு உன் பிள்ளை
பேசவேண்டும் தமிழ்மொழி..
தரணியெங்கும் தமிழ் மணக்க
தளராமல் நீ உழை
நாளைய தலைமுறை
நிச்சயம் வணங்கும்
உனை…
ரதிமோகன்