ஜேர்மனி டோட்முண்ட் நகரில் ஆனைக்கோட்டை இணையம், எஸ்ரிஎஸ் ஸ்ரூடியோ, எம்எஸ் மீடியா ஆகியோர் இணைந்து 06.05.17 அன்று சித்திரைப் புத்தாண்டுக் கலைமாலை நிகழ்வுகளுடன,; சாதனையாளர் கௌரவிப்பை முன்னிலைப்படுத்திய விழா சிறப்பாக இடம்பெற்றது.
ஜேர்மனி டோட்முண்ட் சிவன் கோவில் பிரதமகுரு அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் இவ்விழா ஆரம்பமானது.
இளந்தலைமுறையினரின்; கலை ஆற்றல்களை வளர்த்துவிடும் நோக்கில் அவர்களின் கலை ஆற்றல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
தாயகத்திலும் ஜேர்மனியிலும் எழுத்துத்துறையிலும், கலைத்துறையிலும், அறிவிப்புத்துறையிலும்,விளையாட்டுத்துறையிலும் உழைத்தவர்களை கௌரவித்து பட்டயமளித்து கௌரவிக்கும் நிகழ்ச்சி சிறப்பு நிகழ்ச்சியாக இவ்விழாவில் இடம்பெற்றுள்ளது
25 வருடங்களுக்கு மேலாக தாயகத்திலும் ஜேர்மனியிலும் நாட்டுக்கூத்து கலைஞராகவும் அதுசார்ந்த எழுத்துத்துறையிலும், பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்துவரும் பாசையூர் திரு. யேசுதாசன் அவர்களையும்,
25 ஆண்டுகளாக, தாயகத்தில் நாடக எழுத்தாளராகவும் நடிகராகவும் இருந்தவரும், ஜேர்மனியில் ஏலையா சஞ்சிகை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும்,இயக்குனராகவும், குறும்பட நடிகருமான ஏலையா க.முருகதாசன், 25ஆண்டுக்கான பணிக்கும்
சிறந்த மேடைப் பேச்சாளராக, பட்டிமன்ற பேச்சாளராக தமிழாசிரியருமான திரு.பொ.சிறிஜீவகன் அவர்களையும்
யாழ் மணிக்குரல் அறிவிப்புத்தறையில் தனது சேவையை ஆரம்பித்து புலம்பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்ததன் பின்னரும் உலகத்தமிழ் வானொலி, ரிஆர்ரி றேடியோ தொலைக்காட்சி, ரிரிஎன், ஜிரிவி ஆகிய ஊடகங்களில் தனது சேவையை ஆற்றி வருபவரும் கம்பீரமான குரலால் மேடை நிகழ்ச்சிகளை மெருகு ஊட்டுபவருமான திரு.முல்லை மோகன்அவர்களையும் ,
இசையமைப்பாளர் நாடகத்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் நீண்ட பல ஆண்டுகளாக சேவையாற்றி வருபவருமான திரு.மறிய றொக்குடன் ஐவரின்; சேவைகளைப் பாராட்டி பட்டயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தன்னினம் சார்ந்த கலை, இலக்கியச் சமூகச் செயல்பாடுகளைச் செயதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து சபையோருக்கு இனங்காட்டி நின்ற விழா ஏற்பாட்டளரை பாராட்டுகிறேன்.
விழா நிகழ்ச்சிகளை திரு.முல்லை மோகன், திரு.செ.தேவராஜா, திருமதி.மலர் சிவநேசன், திரு. சீலன், திரு. வ.திலகேஸ்வரன், திரு.வசந்த் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.
வாழ்த்துக்குரியர்களையும் வாழ்தியவர்களையும் பேற்றி மகிழ்கிறேன்
பண்ணாகம் இணையத்தின் இயக்குனர் திரு கிருஸ்ணமூர்த்தி