சேற்றுவயலில் செழித்திடும் வாழ்வு


ஆற்றில காலைக்கழுவி
ஆடிஅசைந்து போற புள்ள
சேற்றில காலைவச்சா தான்
தேடும் வாழ்வு கிடைக்கும்புள்ள

நீ உண்ட சோறும்
நானும் உண்ணும் சோறும்
பார் உண்ணும் உணவெல்லாம்
சேற்றில் விழையும் கொடை அடிபுள்ள

விவசாயி இல்லையென்டா
விலங்குகள் தான் நாமும்
பசியாற முடியாது
ஊண் உண்ண வேண்டும் அடிபுள்ள

சேற்றுகால் உழைக்கையிலே
மண்தாயும் மனதார வரம் தருவாளே
பயிர்களும் விழைந்தும்
பசுமையும் நிறைந்திடும் பாரடிபுள்ள

இந்த போகம் விளைச்சல் வந்தா
ஒட்டியாணம் வாங்கித்தாரன்
ஒத்தாசைக்கு இறங்கி
நடவு நடவன்புள்ள

.
போங்க போக்கிரி மாமா
போதுமே சால்ஜாப்பு
தாரமென ஆனபின்னே
தருமன்வழி நான் தானே

ஆதவன் மழைபொழிய
ஆற்றிலே நீர்வழிய
பசுமை வயலாக
பார்ப்போம் நாம் புது கனவாக..!

கவிக்குயில் சிவரமணி

Merken