செல்வி.த.கார்த்தனாவின் மிருதங்க அரகேற்றம் யேர்மனியில் 02.09.17 நடந்தேறியது

யேர்மனி எசன் நகரில் செல்வி.த.கார்த்தனாவின் மிருதங்க அரகேற்றம்02.09.17 அன்று மிக மிகச் சிறப்பாக மனநிறைவினால் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய விதத்தில் நடைபெற்றது.

ச.தேவகுருபரன், பாலகுமார் ஆகிய யேர்மனி – பிரான்ஸ் வாழ் பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இனைந்து தமிழகத்தில் புகழ்பூத்த பக்கவாத்தியக் கலைஞர்களான கட வாத்தியக் கலைஞர் உமாசங்கர், வயலின் வாத்தியக் கலைஞரான ராதாகிருஸ்ணணன் ஆகியோரின் பக்கவாத்தியத்துடனும், புகழ்பூத்த கர்நாடக சங்கீத வித்தகி சாருலதாமணியின் பாடலுக்கு செல்வி.த.கார்த்தனா எவ்வித பதட்டமும் இல்லாது இயல்பாக மிருதங்கம் வாசித்து அரங்கேற்றி தான் அதற்கு முற்றிலும் தகுதியுள்ளவள் என்பதை நிரூபித்துவிட்டார்.

தமிழகத்திலும்(இந்தியா) வெளிநாடுகளில் தங்களின் திறமைகள் மூலம் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற அனுபவமும் அசாத்திய திறமையும் கொண்ட பாடகி, பக்கவாத்தியக் கலைஞர்கள் கொண்ட மேடையில் தானும் சளைத்தவள் அல்ல என்பதை தனது மிருதங்க வாசிப்பு மூலம் காட்டிய செல்வி.த.கார்த்தனாவே ஐரோப்பாவிலேயே முதல் பெண் மிருதங்க கலைஞராக அரங்கேறியுள்ளமையை நினைத்து மகிழ்ந்து வாழ்த்திப் பாராட்டுகின்றேன்.

இவ்வரங்கேற்றத்திற்கு அறிவிப்பாளராக கடமையாற்றி ஈழத்தமிழரின் பெருமைமிகு அறிவிப்பாளரம் தமிழகம் உலக நாடுகள் எங்கும் புகழ்பெற்ற இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளராக இருந்தவருமான திரு.பி.எச்.அப்துல் கமீட் அவர்கள் செல்வி.த.கார்த்தனாவின் கைவிரல்கள் மிருதங்கத்தை இசைத்த வேகத்தைக் கவனித்து மென்மையான விரல்கள் வீரப்பெண்மணியின் விரல்களாக மாறியது என வர்ணித்து மகிழ்ந்தார்.

ஆனால் குடும்பத் தலைவியாக தனித்து நின்று துணிவுடன் அனைத்துத் திட்டமிடல்களையும், வேலைகளையும் தன் தலையில் போட்டுக் கொண்டு தனது மகளின் கலை முன்னேற்றத்தில் மனம் சளைக்காது அயராது உழைத்து மிகச் சிறப்பான மிருதங்க அரங்கேற்றத்தைச் செய்வித்தமைகௌரவத்திற்குரியது செல்வி.த.கார்த்தனாவின் அன்னையை மகிழ்ச்சியோடு வாழ்த்திப் பாராட்டுகின்றேன.

தனது தந்தையின் இலட்சியக் கனவை நனவாக்கி செல்வி.த. கார்த்தனா அதனை நிறைவேற்றியுள்ளார்.இதனை ஒரு அரங்கேற்றமாக பார்க்க முடியவில்லை.அனுபவம் வாய்ந்த ஒரு பெண் மிருதங்க இசைக் கலைஞர் சங்கீத வித்தகி சாருலதா மணியின் பாடலுக்கு மிருதங்கம் வாசித்ததாகவே எனது செவியும் கண்ணும் உள் வாங்கியது, புளகாங்கிதம் கொள்ள வைத்தது.சபையோரை ஆட அசையாமல் அமைதிகாத்து உள்வாங்கிய அற்புதமான அரங்கேற்றம் என்பதை மகிழ்வோடும் பெருமையோடும் பதிவிடுகிறேன்.மீண்டும் ஒருமுறை செல்வி.த.கார்த்தனாவிற்கும் அவரின் அன்னையாருக்கும் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

ஆய்வாளர்  க முருகதாசன்

 

Merken

Merken

Merken

Merken

Merken