பொது
நலம் மறந்தோர்
தன் நிறமும்
மறக்கின்றார்..
ஆசை
அதிகரிப்பால்
அறமும் மறந்து
மறத்தையும் மறுக்கின்றான்.
நான்
எனும் சிறைக்குள்
உறவுச் சிறகுகள்
அறுத்து தனித்து
நிமிர முனைவு..
முடிவதில்லை
நோயிலும் பாயிலும்
வீழும் போது
ஆளனியை தேடும்..
அவலம் உச்சம்.
பணத்துக்கான
முற்றுகையில்
சொந்தங்கள் சுரண்ட
சுற்றி நிற்கும்..
எப்படா
சீவன் போகுமென
கட்டிலை
சுற்றி காவல் நிற்கும்..
அன்பே சிவம்
உண்மை உறவே
உயிர்ப்பென
சுயநலம் கலைத்து
மனிதனாய் வாழு..
யாரும் நிரந்தர வாசியல்ல
விழித்திடு…
ஆக்கம் கவிஞர் தயாநிதி