சேத்துக்குள்ள கால வச்சி
நாத்து நடும் செங்கமலம் – நான்
சேகரிச்ச ஆசையிலே சிதறுதடி எந்தன் மனம்
பாத்த விழி பதறி உன்ன
சேத்தணைக்க உருகுதடி ஒரு தரம் – உன்
பூத்த உடல் வேர்த்தவுடன் மாறுதடி எந்தன் நிறம்
நாவற்பழ உதட்டழகி
நான் விரும்பும் கருத்தழகி
நாலாப் பக்கம் பாக்கிறியே
என்னை விழுங்கி…
உன் நாணத்திலே நான் விழுந்தேன் விழி பிதுங்கி
கத்துக்குட்டி நான் கண்ணக் காட்டு வாறேன்
காட்டு மேட்டுலே கன்றுக் குட்டியாவேன்
தங்கப் பூவுக்கு ஒட்டியாணம் தாறேன்
தத்தி தாவி வா நான் கட்டிலாட வாறேன்
சும்மா உன்ன பாத்ததிலே ஆனதடி மனம் குரங்கு
கம்மாக்கரை நீர் இருக்கு கால் கழுவி தரை ஒதுங்கு
ஒரு உம்மாத் தந்தால் அது எனக்கு அருமருந்து
இம்மாத்துண்ட நீ அளித்தால் அது பெரும் விருந்து
ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்