எந்தப் பெண்ணையும் செதுக்குவது, என்றும் அவளே !!!
இந்த நிலைதான் தன்னிலை யென நிறுவுவதும் அவளே ,
சொந்தக் கலாச்சாரத்தை தாமே மறந்து இன்று
வந்த காலச் சக்கரத்துக்குள் வசியப்பட்டு சுழல்கின்றோம் .
சிந்து நாகரீகம் இன்று சீரழிந்து ,கீலாம் பாயாகிடவே ,
பொந்துகளில் வாழ்ந்த கதை இனியிங்கு போயே போச்சு.
நொந்து போன நெஞ்சங்களே இனியும் வருந்தாதீர் ,
சந்தைப்பட்டுவரும் ஆடைக்குறைப்பில் சங்கடமின்றி இணைந்திடுவீர்
***
கலி நேசன்