காலைவிடிந்தது
கலக்கம் தெளிந்தது
மாலை வந்தது
மயக்கம் வருகுது
வாழ்கை என்பது
இன்பமும்துன்பமும்
மாறிவந்துபோவது
இன்றுகாணும் வாழ்வு
இடைக்கிடைகாய்ச்சல்
இரவுவந்தால் ஏக்கம்
தலையிடி தலைச்சுத்து
நித்திரையும் குறைஞ்சு
உடல்மெலிந்துபோச்சு
கத்திப்பேசிக்கனநாளாச்சு
இருமினால்ப்பயம்
தும்மினால்ப்பயம்
இப்பஇங்கே மனைவிக்குப்பயம்
என்ஆணவம் அடங்கி
பெட்டிப்பாம்பாக
தாறதைச்சாப்பிட்டு
வீட்டுமாப்பிளையாய்
என்னை இருக்கவைத்ததோ
கோதாரிக்கொரோணா
காலம்மாறும் கவலைதீரும்
நெஞ்சைநிமித்தி வருவான்டி
அப்பமொத்தமாக இருக்கடி
என்று மனம்சொல்ல
மெளனமாய் இருக்கிறன்
சிங்கன் மறுபடி திரும்பவான்டி
(சுவைக்கவியோடு இந்திரன்)