சத்திய திரு நாள்…!

மெய் ஒன்று
மெய்யினை
நேசித்து
மெய்யாகவே
மெய்யின்
வாழ்வினை
பொய்யின்றி
தொடங்கும்
ஓர் உணர்வு
காதலாகும்..!

கை கூடி
களிப்புற்றோர்
கலியாணம்
எனும் கட்டுக்குள்
கச்சிதமான
இல்லற பயணம்
இனிமைகளின்
ஆரம்பம்..!

நவீன உலகில்
வியாபாரச்
சந்தைகளின்
தந்திரோபாய
யுக்தியில்
உருவான திரு
நாளாய் எங்கும்
காதலர் தினம்..!

இன் நாளை
இனிதாக்கிட
இரு சாராரும்
இணைந்து
உறுதி எடுக்கும்
சத்தியத்
திரு நாளாக்கினால்
நாடும் வீடும்
சிறக்கும்..!

கலைஞர் தயாநிதி