யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தும்- சொல்லும் – வாழ்வு –
ஜெனிவா க.அருந்தவராஜா எழுதிய
„புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் “ என்ற நூல் யேர்மனி டோட்முண்ட நகரில் 14.10.2023 வெளியிடப்பட்டது,
இதில் ஆசிரியர் பட்டிமன்ற நடுவர் ,பேச்சாளர் ,யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இன்னும் பல ஆளுமையாளரான திரு. சிறீஜீவகன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .
நூல் ஆய்வுரைகளை இளையோர் வழங்கியிருந்தனர். இதில் பரதநாட்டியக் கலைஞர் , பேச்சாளர் என இன்னும் பன்முக ஆளுமை கொண்ட செல்வி. கார்த்திகா சிவபாலன் அவர்கள் ஆளுமையுடன் தனக்குரிய பகுதியை சிறப்புற ஆய்வுரையை வழங்கினார்.
அதுபோல் யேர்மனியில் மருத்துவ வேதிகராக பணிபுரியும் திரு.காந்தரூபன் அவர்கள் நூலினை வித்தியாசமான கருத்தோட்டத்துடனும் மிக தெளிவுடனும் சிறப்பாக ஆய்வுரை நிகழ்த்தினார்.
திரு.சிவவினோபன் இவரும் பேச்சாளர், நடிகர், அறிவிப்பாளர் என பல் திறமையாளரான இவர் தனது பார்வையையும் நூலில் இருந்த விடையக்களை வந்தோரை கண்களை மூடி இருக்கக் சொல்லி அவையோரை தன் பக்கம் ஈர்த்திருந்தார்.
நடனக்கலைஞர், ஆய்வாளர் என பன்முக ஆற்றல் உள்ள திரு.சபேசன் அவர்கள் மிக சிறப்பாக நூலில் உள்ள விடயங்களை தனது பாணியில் பேச்சாற்றலால் சிறிப்புற நிறை வாக்கினார்,
இதன் பின் நூல் ஆசிரியர் க. அருந்தவராஜாவிடம் இருந்து முதல் பிரதியை டோட்முன் கோபுரா ஞானம் ரெஸ்ரையில் உரிமையாளர் பெற்றுக்கொண்டார் ( அவர் சார்பில்திரு. சிறீஜீவகன் ) அதன் பின்னர் அவையிலிருந்தோர் அனைவரும் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
இத்துடன் வாழ்துரைகளை
எழுத்தாளர்,மண் ஆசிரியர் திரு சிவராசா அவர்கள் க. அருந்தவராஜா அவர்களை தாயகத்தில் இருந்தே தெரியும் என்பதால் அவர்பற்றி சிறப்புக்கள் , ஆற்றல் களை எடுத்துரைத்து தனது வாழ்துரையை நிறைவு செய்தார்,
அதன் பின் ஆசிரியர் கவிஞர் ,எழுத்தாளர்,பேச்சாளர் என பன்முக ஆளுமையாளர் அம்பலவன் புவனேந்திரம் அவர்கள் ஆளுமை மிக்க வாழ்துரையை விரிவாக நிறைவாக்க
தொடரந்து ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்,எஸ் ரீ எஸ் தமிழ் தொலைக்காட்சியின் முதன்மை அறிவிப்பாளர் ,இணைப்பாளர் ,திரு முல்லை மோகன் அவர்கள் தனது மதுரக்குரலால் வாழ்த்துரை வழங்கினார். பின் எழுத்தாளர் க. அருந்தவராஜா ஏற்புரையுடன் சிறப்பாக எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆர்வலர்களுடன் ரமேஸ் அவர்கள் பிறாங்போட் நகரில் இருந்து வந்து சிறப்பித்தார்
அனைவரும் சிறப்புற இணைந்து நின்ற பலங்களாக வந்தோர் சிறப்பும் வாழ்தினர். மகிழ்வும் மன நிறைவுகண்ட எழுத்தாளர் முகம் மலர நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்கள் முகங்கள் மலர பலர் வந்து கூடி எல்லோரையும் மகிழ்வித்திருக்க சிறப்புடன் நிகழ்வு நிறைவாககியது
பிரதானஅனுசரனை:
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்-ஒன்றியம்
எஸ் ரீ எஸ் தமிழ் தொலைக்காட்சி,
யேர்மனி தமிழ்க கல்விச் சேவை ஐரோப்பா,
தமிழர் அரங்கம் ஆகிய அமைப்பினர் வழங்கியிருந்தனர்.