கோடிமக்கள் ஓடிவந்து
கூடிஆடிப்பாடி வணங்கிநின்று
தாயவளின் திருவருளை
பெற்றுமனம் மகிழ்ந்திருந்து
தேரேறிவரும் தேவியின் அழகை
கண்டுமனம் நெகிழ்ந்துவிடும்
வானுயர்ந்த கோபுரமும்
வடிவான ஆலயமும்
வந்துகண்ட ஆனந்தத்தில்
மனக்கவலை தீர்ந்துவிடும்
அம்மாதாயே என்று பஜனைகளும்
நேர்த்தியுடன் காவடியும்பால்குடமும்
காமாட்சியின் வீதியிலே ஆனந்தம்
தாயவளோ பெருவீதி சுற்றிவர
நாதஷ்வர மேளதாளம் முழங்கிவர
பக்தியோடு அடியார்கள்
பரவசமாய் தேர்இழுக்க
ஆடிவரும் தாய்அழகை
காணக்கண்கோடிவேண்டும்
மனக்கவலை தீர்த்துவிடும்
தாயாரின் முகம்காண என்னதவம்
நாம் செய்திருந்தோம்
அகிலத்தைக்காக்கும்
அகிலாண்டேஷ்வரியே,
ஆதிபராசக்தியே
காமாட்சி அம்மாவே
தாயேஅரோகரா
உன்திருவடி பணிகின்றோம்
தாயே நீயே துணை எமக்கு
வந்த இடத்திலே
வடிவானகோயில்கட்டி
பார்புகழும் பார்வதியை
வணங்கவைத்த குருவே
உமக்கு கோடிவணக்கம்
பக்திப்பரவமான கோலமும்
அன்பானபேச்சும்,பணிவானகுணமும்
வெண்மை நிறத்தாடியும்
வற்றாத இறைத்தொண்டும்
உங்கள் சைவம்பணியும்
தமிழ்த்தொண்டும் கண்டோம்
நீங்கள் பல்லாண்டு
நலமோடு வாழவேண்டும்
கூடிவந்து கும்பிட வழிசெய்த
ஐயா உங்களுக்கும் கோடிநன்றி
(கவியோடு மயிலங்காடுஇந்திரன்)