கைபேசி காதல் கதை பேசியது!மட்டுநகர் கமல்தாஸ்

கைபேசி
கன்னம் வரை வந்து
காதல் கதை பேசி
கனவுகளில் பல தடவை வந்து
காதல் தென்றல் வீசி
அவள் செல்லக்குரல் கேட்க
மெல்லச் சிணுங்கும்
தொலைபேசி
அதிவேகமாக விரையும் நிமிடங்கள்

உயர்ந்த உயர்ந்த கட்டிடங்கள்
பயந்து ப வேலைப்பாடுகள்
அவள் நினைவுடனும்
எதிர்கால கடமையுடனும்
நகர்கின்றது வாழ்க்கை

வித விதமான ஆடம்பரங்கள்
புதுப்புது நவீனத்துவங்கள்
அங்கே எனது உருவவிம்பம்
இங்கே அவளது உருவவிம்பம்
உலா வந்து வண்ணம்
உரையாடல் அலவலாகும்

சிறு சிறு பிடிவாதச்சண்டைகள்
நீ எனக்கு வேண்டாம்
நான் போறேன் என்றெல்லாம் பிரிவுகள்
சில நிமிடங்கள் கழித்து
சிறு அழைப்புக்கள் தீண்டும்
முரண்பாட்டைத்தீர்க்கவே!

குளக்கரையில் காத்திருக்க வைத்து விட்டு
தந்தை தொலைந்ததென்று
அழுத குழந்தையாக
தூரத் தொலைவில்
நானும் அவளும்
தொலைந்துகிடக்கின்றோம்

அன்பு துவட்டிய
காலை வணக்கம்
தகவல்பெட்டிக்குள்
காத்துக்கிடக்கும்
தினசரி எனது தகவல்
பிரிவுச்சித்திர வதைகளை
மூடி மறைத்த படி
தினம் தினம் தொடரரும்,
பல வருடத்துக்குபிறகு
பார்க்க செல்கின்றேன்
என்னைக்கண்டவுடன்
விசும்பி அழுது விட்டாள் சந்தித்த நொடியில்

காதல் சுமையுடன்
கல்யாண அன்புச்சுமையை
ஏந்துகின்றேன்…
மறுபடி பறக்க தொடங்கிவிட்டேன்!!
என்றாவது ஒருநாள் வாழ்வு சிறக்குமென்று
அன்று பிரிந்ததைப்போல அல்லாது
எனது பிரதி விம்பத்தையும்
விட்டு வருகின்றேன் அவளுள்……..

-மட்டுநகர் கமல்தாஸ்