கூண்டுக்குள் தத்தளிக்கும்
பறவைகள் போல் இங்கு- நாம். .
கூட்டமாய் நிற்பதோ குற்றம் ஆனதே
வீட்டுக்குள் அடைபட்டு
வெளிச் செல்லல் தடைப்பட்டு
மாண்டவர் மாட்டிட
மற்றவர் அழுதிட
கூண்டுக்குள் தத்தளிக்கும்
பறவைகள் போல் இங்கு- நாம். .
மரணத்தால் கூடிடவும் முடியவிலை
மங்கல மேளங்களும் கேட்கவில்லை
விடிவெது இரவெகது தெரியவில்லை
கூண்டுக்குள் தத்தளிக்கும்
பறவைகள் போல் இங்கு- நாம்
பூமித்தாய் தத்தளித்தாள்
புரியாமல் வியந்து நின்றாள்
புரியாத கிரிமி ஒன்று
புவி வாழ்வோர் உயிர்பறிக்க
புவிவாழ்வோர் அளறிநிற்க
கூண்டுக்குள் தத்தளிக்கும்
பறவைகள் போல் இங்கு- நாம். .
ஆக்கம் சுதே…..