கனவிலும் என் மேல் கரிசனை காட்டும் ~கண்ணின் மணியே காத்திரு கண்ணே.
நினைவு நீயின்றி வேறில்லையிங்கு உன்
~நிழல்ப்படமே நிஜமாய் நிழலாடுகிறது.
மனக்கனவில் உனக்காய் நான் கட்டிய
~மாளிகையை மனக்கண்ணால் பாரடி.
என் உயிரின் வலி அதில் ஊடுருவி
~எண்ணற்ற கற்களாய் காட்சி தரும் . பெண்ணொருத்தியின் நினைவு தான்
~பெருநோயை விடக்கொடியதென்பேன்.
கண்ணசைத்து நீபூக்கும் பார்வைக்காய்
~கனதூரமென பாராமல் ஓடிவந்திடுவேன்,
பொன்னைப் பொருளை சேர்த்திடத் தானே
~பொல்லாத பிரிவைக் கட்டியழுகிறேன் .
திண்ணையில் கிடக்கும் பாட்டியும் ,
~தெருக்கடையில் தீயாகும் தந்தையும்.
பண்ணையில் பாடுபடும் அண்ணாவும் ,
~புன்னகை இழந்து நிற்கும் அக்காளும்,
என்னையே நம்பியிருக்கும் தம்பியோடு
~எல்லோருமே என்னினைவில் வரவே,
கண்ணை மூடிக்கொண்டு இங்கு நான்
~கனவு கொண்று நினைவு தின்கிறேன் .
உன்னை நினைத்து ஏங்கி நிற்பதும் ,
~உறுதியோடு உறவுக்காய் உழைப்பதும்
ஆணாகியதால் ஆண்டவன் எனக்களித்த
~அன்பான வரமோ அல்லது சாபமோ அன்பான உள்ளங்கள் தானறிவர்
ஆக்கம் ரியால் நேசன்