கிறுக்கல்..


கவிதையை
காண இரு விழிகள்
பட படக்குது..
இமைகளின்
துடிப்பில் புதுக் கவிதை
வரிகளாகுது..
தனிமையை
வென்றிடும் ரகசியம்
பலருக்கு தெரிவதில்லை.
காணாமல்
போகின்றது மரபு வழி
கவிதைகள்.
மரபுகளும்
உரு மாறி கரு மாறி
ஹைக்கூவாகுது..
வாழ்க்கையும்
வாழ்வியல் காதலும்
ஹைக்கூவாகி கோடேறுது.
தரவுகள்
தடுமாற தாம்பத்தியமும்
திசை மாறுது..
இது வரை
வடித்தவை யாவும்
வடிவிழக்குது…
காணும்
ஆவலில் காற்றின் வேகம்
தாண்டி பறந்தது மனசு..
அவளை
கண்டதும் கணப் பொழுது
மெளனம்…
மொழி
பெயர்ப்பின்றி
பாஷை புரிந்தது..
போடி
உன்னோடு கா
என மனம் சிணுங்கியது..
உதட்டோரம்
அந்த அழகான புன்னகை
சாமரம் வீசியது.
இருள்
அகற்றி வெய்யோன்
பல்லிழிக்கின்றான்.
அண்டத்தில்
அவனைக் கண்டால்
அல்லிக்கும் கொண்டாட்டமே..
அது போன்றே
அவளைக் கண்டதும்
ஆர்ப்பாட்டம் ஆரம்பமே..!

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி