கண்ணோடு ஒளியாகி
கவியோடு மொழியாகி
கடவுளிடம் வரம் வேண்டி
கரம் சேர்ந்த காதலியே !
கடலின் மேல் அலையாகி
கரை சேரும் நுரையாகி
கண்மணியின் இமையாகி
காதலோடு கலந்தாயே !
கானக்குயில் இசையாகி
காதோரம் இன்னிசை தூவி
காதல் கானம் தினம் பாடி
கவலைகளைக் களைந்தாயே !
காதலே நீ கல்லெறிந்தால் …
காவியங்கள் பொய்யாகி
காதல் வெறும் கனவாகி
கண்ணாளன் உடல் வேகும் ;
கண்ணீரில் உயிர் போகும் !
– வேலணையூர் ரஜிந்தன்.