காதலர் தின வாழ்த்துக்கள்

மோதல் கொண்ட எம்
விழிகள் நான்கும் அன்று
மௌனமதையே தம் 
மொழியாக்கிக் கொண்டனவோ.
.
காதல் பிறந்திடத்தானோ
வார்த்தைகளை நாம். அடை
காத்து வைத்திருந்தோம்
எம் மனக்கூட்டுக்குள்ளே.
.
தூதாக நீ விடும் உந்தன்
துருதுரு விழிக்கணைகள் ஒவ்வொன்றும்
துளைத்து பிழந்து என் நெஞ்சை
திறந்து விட்டதோ மனதின் கதவை.
.
பாதகமான பதில் நீதர மாட்டாய்
என நிரந்தரமாய் நம்பியே நானும்,
பத்தியம் காத்துவந்த வார்த்தைகளை உன்
பதிலுக்காய் அனுப்பிக் காத்திருந்தேன்.
.
சாதகமான முடிவை நீதந்துமே என்னை
சாதலில் இருந்து மீட்டெடுத்ததால்
சாதிக்கிறோம் கொண்டாடியே இந்த
காதலர்தின நந்நாளை இந்நாளிலே.
(யாவும் கற்பனை)
..
காதல் நேசன்