பூதமாய் காற்றுக்குள்ளே
ஐம்புலனும் ஈரமாய்
வேதமாய் துலங்கும் வாழ்வுக்குள்ளே
அன்பு மட்டும் ஈரலிப்பாய்
உயிர்ப்புடன் மனத்தைக் கடத்துகிறது .
நட்ட நடு ராத்திரயில்
நட்சத்திர பந்தலிட்டு தொட்டணைத்து
தூர விலகும்
வானத்து நட்சத்திரம் போல
கூடிக் கலைவதை விட
வானத்து கதிரைபோல சுட்டாலும்
தூய ஒளியில்
உயிர் காக்கும் காவல் அன்பு மகத்தானது.
விசித்திர நஞ்சு அன்பு
தின்பவர்களை விட்டு விட்டு
ஊட்டுகிறவர்களை கொல்கிறது
உணர்வுகளை தின்கிறது
ஆக்கம் இணுவை சக்திதாசன்