மொழி அறுவடை செய்து கொல்கிறாய்
உன் விழி அருவாள் கொண்டு
வலிகள் யாவும் கவிதையாகிறது
என் உணர்வுகளைக் கொன்று
எழுதுகோல் ஒப்பிக்கிறது
அவ்வப் போதும் சில பொய்களை
என் இறந்த கால வாழ்வினில்
ஒரு இறப்பை அறிமுகம் செய்ய வந்தவள்
நீ என்பதை உணர மறந்தேன்
உன்னோடு பழகிய நாட்களில்…
நிலவென்று சொன்னேன்
பூவென்று சொன்னேன்
பூகம்பம் தந்தாய் மனதினில்
பூநாகம் போல தீண்டினாய் உண்மையில்
காதல் கொடிய நோய்
காலம் வெல்லுமா விடியலாய்
காமம் சொல்லும் கதைகளாய்
கவிதை சொல்ல வந்தேன் தென்றலாய்..
ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்