கவிஞர் தயாநிதியின் (புத்தகம்..)

படிக்கத்
தெரியாத ஆணிடம் கிடைக்க
கூடாத புத்தகம்
பெண்.

படிக்கத்
தெரிந்தவனும் படித்து
முடிக்காத புத்தகமும்
பெண்.

படிக்கப்
படிக்க சுவை குன்றாத
அழகிய புத்தகமும்
பெண்..

அட்டைப்
படத்தை வைத்தே
முடிவு செய்ய முடியாத
புதிரான புத்தகமும்
பெண்…

பிடித்ததை
படித்து முடிக்கவே
முடியாத புத்தகமும்
பெண்..

வரலாற்றில்
ஆவணமாக்கப்
படவேண்டிய அதிசயம்
நிறைந்த புத்தகம்
பெண்..

தாயாய் தாரமாய்
மகளாய்
தங்கையாய் இன்னும்
புத்தகம் விரியும்..
தமக்கையாய்
தோழியாய் காதலியாய்
பல அவதாரங்களாய்
பிறப்பெடுக்கும்
புத்தகம் பெண்…

புரிந்து
படித்தவன் தன்வாழ்வை
வென்றிட காரணமான
புத்கமும் பெண் எனும்
உண்மையை
உணரும் காலம்…?
29.01.2022..

ஆக்கம் கவிஞர் தயாநிதி பிரான்ஸ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert