சாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று முடித்து பட்டதாரியாகியாகி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.தற்போது வட கிழக்கு லண்டன் தமிழ் கல்விக் கூடத்தில் தலைமை ஆசிரியராக செயல் பட்டு வருகின்றார்.லண்டனில் diplomate of chaild care course முடித்து பணி பணி புரிகின்றார்.போர் அனர்த்தங்களால் ஆரம்பத்தில் ஜேர்மனி நாட்டை வந்தடைந்தவர் தனது தமிழ் மொழிப்பற்றாலும் இசை மீது கொண்டுள்ள ஆர்வத்தாலும் ஜேர்மன் கலை பண்பாட்டுக் கழகத்தில் தன்னை ஓர் பாடகியாக இணைத்துக் கொண்டார்.தமிழ் ஆலயத்திலும் ஆசிரியராகப் பணி புரிந்த இவர் அதே குழுவில் பாடிக் கொண்டிருந்த anuraவைத் திருமணம் செய்து கொண்டார்.மாவீரர் காணம்.மேயர் சுரேந்தியின் பாடல்கள்.கரும்புலிகள் 8விடுதலை வேள்வி.உயிராயுதம்கல்லறைப்பூக்கள் போன்ற இறுவட்டுக்களில் கண்ணண் மாஸ்ரின் இசையில் பாடி இருக்கின்றார்.இவரது மகன் இசை அமைத்த பல பாடல்களுக்கு வரிகளையும் இவரே எழுதி இருக்கின்றார்.இவரது மகன் துவாரகன் முறைப்படி kebord பயின்றவர். Bass guitar இசைப்பதிலும் வல்லவர்.அப்பா அம்மா மகன் மூவருமாக at karoake &dj இசைக்குழுவினை இயக்கியும் பாடியும் வருகின்றார்கள்.ஜேர்மன்munchangladbach தமிழ் ஆலயத்திலும் ஆசிரியராகவும் பெற்றோர் சபை நிர்வாகியாகவும் செயல் பட்டுள்ளார். அங்கே தனது ஆக்கங்களில் உருவான நாடகங்களை மாணவர்களுக்கு பயில்வித்து புணர்வாழ்வு அரங்குகளில் மேடையேற்றிய பெருமைக்குரியவராகின்றார்.இன்றுவரை கவிதை கட்டுரைகள் எழுவதிலும் வல்லவராகி எமது அடுத்த தலைமுறையினர் தமிழை மறவாதிருக்க அரும்பாடு பட்டு வருகின்றார்.யார் இவர்கள்.சிற்றிசன்.நாங்கறெடி நீங்க றெடியா.அடிமை விலங்குடைப்போம். தேசத்தின் குரல் என இவரது படைப்புக்கள் நீள்கின்றன.இவரரது பல ஆக்கங்கள் புலத்தையும் களத்தையும் பற்றிய எண்ணங்களால் உருவானவை என்பது தனிச் சிறப்பு.தப்பி வந்து விட்டோம் என தான் மட்டும் குறுகிய வட்டத்தினுள் வாழாது சீரான குடும்பத் தலைவியாகவும். கலை பண்பாடுகளில் நேசம் நிறைந்தவராகவும் வாழ்ந்து வரும் இவர் போன்றவர்களை நாமும் வாழ்த்தி வளம் சேர்க்க வேண்டியவராகின்றோம்.பாடகி ஆசிரியர் தேவகி அனுராவை நாமும் வாழ்த்துவோம் வாருங்கள். வாழிய வாழியவே.