கலைஞர் ஏக.எஸ் துரையின் ஐம்பதாண்டுகள் உழைப்பிற்கு பொன்விழா..
ஐம்பதாண்டுகள் என் உழைப்பிற்கு பொன்விழா..
எதையும்இ எவரையும் இனியம் நம்பிப் பயனில்லை..
நானே களமிறங்க வேண்டும்..
இதை என் பத்து வயதில் கண்டுபிடித்தேன்..
ஊரை..
உறவை..
உலகத்தை..
சமயத்தை..
பள்ளியை..
கடவுளை..
அரசியலை..
நம்பிக்கைகளை..
தத்துவங்களை…
தலைவர்களை..
இத்தாயதி இத்யாதி இத்யாதிகளை..
தூக்கி ஓரமாக வைத்துவிட்டு பூமித்தாயை நம்பி களமிறங்கினேன்..
நாம் முயற்சிக்காவிட்டால் அருமந்த வாழ்வை கொடிய உலகம் சூறையாடிவிடும்..
13வது வயதில்..
சல்லி மண் அள்ளல்இ
மீன் பிடித்தல்இ
கற்பித்தல் என்று தொழில் செய்தபடி படிக்க ஆரம்பித்தேன்..
இன்று..
ஐம்பது வருடங்கள் வேலைச் சந்தையில்..
என்னை மட்டுமே நம்புகிறேன்..
மற்றவர்களை மதிக்கிறேன்..
எனக்காக இந்த உலகில் எவரும் பிறக்கவில்லை என்று கருதி..
அனைவரும்
உழைக்க வேண்டும்..
உழைப்பே உன்னதம்..
என்
உழைப்பை பிரமாண்டமாக்க புதிய காலடியை வைக்கிறேன்.