கற்றுக் கொள்ளாத காதல் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

 

கனத்த இரவுப் பொழுதொன்றில்
கனவுகளைச் சித்தரித்து
கவிதையொன்று எழுதுகிறேன்
கண்ணே உனக்காக.!

கவலையும் , கண்ணீரும்
காதலைக் கழுவிச் செல்கிறது
காதலி உன் நினைவுகள் மெல்ல நழுவுகிறது

காதுகளில் ரிங்காரமிடும்
கன்னிச் சிரிப்பும் , கதைகளும்
காவியம் எழுதச் சொல்கிறது
கடைசிவரை கண்விழித்திருந்ததில்
காணாமல் போனேன் நான் கனவுகளில் ..

நியூட்டனின் விதியும் , நிலவின் ஒளியும்
நெருப்பைக் கக்குகிறது மனதில்
நிராயுத பாணியாய் நான் மட்டும்
காதல் போர்க்களத்தில்

சித்ரவதை என்றான போது
வலியைத் தாங்கிக் கொண்டாலும்
ஒலி தூங்கிக் கொள்வதில்லையே
இதயம் அழும் ஓசை எந்த விதத்திலும்
கேட்க உனக்கு நியாயமில்லையே

வெற்றியடையாத காரணத்தை
தோல்வியுற்றாலே உணர முடியும்
என்னை முற்றுகையிட்ட உன்னாலே
எனக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்

சற்று தடுமாறுகிறேன் – நான்
கற்றுக் கொள்ளாத இந்த காதல் தேசத்திலே…

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்