கண்வாலே பேசவா !

கண்ணிமை
கதைப் பேச்சில்
காவியம் உருவாகும்
காளையர் நெஞ்சத்தில்
காவியமாய்
கணையாழும்
பெண்ணிவள்யாரோ

இந்திர லோகத்தில்
இருந்து தான் வந்தாளோ
இதயத்தை இல்லமாக்கி
புகுந்துதான் கொண்டாளோ
மந்திரக் கண்ணுடனே
மயக்கித்தான் நின்றாளோ
மனதினில் புகுந்த இவள்
மதி மயங்கச் சொய்தாளோ

வஞ்சி அவள் வனப்பளகு
வானத்தில் புது நிலவு
வாழ்வதுக்கு துணையாக்க
வந்த தேனோ புது நினைவு
சிந்தையிலே அவள் நினைவு
சிங்காரப் பேரழகு
வஞ்சி வந்து இணைந்து விட்டால்
வளமாகும் என் வாழ்வு !

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கருவான திகதி 16.07.2021 உருவான நே ரம் 11.45 மணி