உணர்வுகள் விலை போனது
உயிரைக் கரைத்து விலையானது
உணர்வுக்கும் உயிர் உள்ளது
உணராமல் உறவாட உறவாகுது
தேன் குடிக்கும் வண்டுக்கு தேவை என்ன
மனமுவந்து கொடுப்பதில்லை
மலர் தேனை உண்ண
மலர் துடிக்கும் வேதனைச் சொல்ல
செவிமடுத்து மனங்கள் கேட்பதில்லை
நிச்சயம் என்பது நிர்ப்பந்தம்
பெண் இச்சைகள் எல்லாம் தீப்பந்தம்
உச்௸பம் ஏறாக் கோபுரம்
பெண் உணர்ச்சிகளெல்லாம் கற்பூரம்
கலவியும் ஒருவகை சொர்க்கம்
கனவுக்குள் வாழும் பெண் வர்க்கம்
கவலையைக் கொடுத்திடும் இன்பம்
கடனாய் வாழும் உடலில் காமம்
துணை தேடும் தேடல் சுகம் தானே
இணையின்றி வாழ்ந்தால் வினைதானே
மனை என்றும் பெண்ணின் சிறை தானே
மனம் நொந்து போனால் எதற்கு மணப்பானே
மொட்டு விட்ட வேளையில் மோகம் முப்பது
கட்டுப் பட்டு வாழ்கிறேன் தாகம் கெட்டது
கெட்டி மேளம் வந்து என்னைச் சுட்டது
மெட்டியொலி மட்டும் என் காலைச் சுற்றுது
கட்டிலிலே பெண் கற்பனைகள் ஆயிரம்
கட்டினவன் தட்டியெழுப்பனும் ஆயினும்
படித்து விடும் பெண்ணும் ஒரு நூலகம்
பட்டினியில் இட்டுவிட்டால் பெண் மனம் வாடிடும்
ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்