கடவுளின் நிழல்

அந்த மலர் தோட்டத்தில்
கண்ணில் தெரிந்த நிழல்
அனாதையாகச் சுற்றித் திரிந்தது..

என் நினைவுகளைக் கிழித்து தேடியபோதும்
அது என் நண்பனா‌, சகோதரனா, தெரியவில்லை..

வெள்ளை ஆடையில்
மிடுக்குடன் அந்த பிம்பம்
தூரதிசை நோக்கி லட்சியம் ஏதுமின்றி நடந்து கொண்டே இருந்தது..

மனித வாசமில்லாத
பெருவெளியில்
காற்றுடன் கைகோர்த்து
உல்லாசமாக உலவியது..

என் கண்களைக்
கவ்விப் பிடித்தும்
அந்த நிழல் நூலிழையில் பிடிப்பேதுமின்றி அந்தரத்தில்
மிதந்து கொண்டிருந்தது!

ஓ.. காற்றுவெளியில்
மிதந்து செல்லும்
அந்த நிழல் கடவுள்தான்..!

சத்யா பிரான்சிஸ்