ஓவியம் ஒன்று வரைய வேண்டும் 

எனக்குள் 
நிறைந்து விட்டாள் 
அந்த ஓவியப் பாவை !

என் கண் முன்னே 
ஒளியாகவும் 
உதட்டு வளி 
வார்த்தையாகவும் 
எண்ணங்களின் 
முழுமையாகவும் 
இப்போது வெளிப்படுகிறாள் !

என் உயிர்த்தூரிகை 
பிரியப்படுகிறது 
அவள் உருவத்தை 
இப்போதே வரைந்தாக வேண்டும் !

உணர்வுகளின் மை கொண்டு 
அவள் உருவத்தை 
முழுமைப் படுத்த வேண்டும் !

காதல் ரசனைகளால் 
மேலும் எழில் சேர்க்க வேண்டும் !

காதல் செடியாய் 
எனக்குள் துளிர்விட்டவள் 
சில தருணத்தில் 
இவன் ஆசைச் செடி வளர 
அன்பு நீர் இறைத்தவள் !

எட்ட நின்று 
நினைவுகளால் கட்டிப் போட்டவள் 
என் நினைவுளை கட்டி ஆள்பவள் !

வரைந்தே ஆக வேண்டும் – என்
காதலின் ஒவியப் பதுமை அவள் !

– வேலணையூர் ரஜிந்தன்.