நேற்று லண்டனில் காண்பிக்கப்பட்ட புதியவன் இராசையா அவர்களின் „ஒற்றைப் பனை மரம்“ திரைப்படத்தை எமது மக்கள் சுமார் 350 பேர் பார்த்து மகிழ்ந்தார்கள்.இலக்கியவாதிகள்,நாடக,திரைப்பட ஆர்வலர்கள்,ஆய்வாளர்கள் பலரை காணமுடிந்தது, சந்தித்து பேசமுடிந்தது.புதியவன் இந்த திரைப்படத்தில் துணிச்சலாக பல கருத்துகளை சொல்லியுள்ளார்.தாயகம் போர்சூழலில் சிக்கியிருந்த
காலத்தையும் ,போர் முடிந்த பின் இருக்கும் காலத்தையும் இணைத்து பல விடயங்களை சொல்ல முயன்றுள்ளார்.திரைக்கதையில் இன்னும் கவனமெடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.படத்தில் நடித்தவர்களை நன்றாகவே நடிக்க வைத்திருகின்றார். இயக்குனர்.படத் தொகுப்பிலும் இன்னும் கவனமெடுத்திருக்கலாம்.இவைகள் குறை,குற்றம் என்று இல்லாமல் இனி வரும் காலங்களில் தெளிவான செயல்பாட்டுடன் பல விடயங்களிலும் கவனம் எடுக்க வேண்டும் என்பதையே சொல்ல விளைவதாகும்.17 விருதுகளை பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.படம் முடிந்தபின் பார்த்தவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றதை அவதானிக்க முடிந்தது.புதியவன் இன்னும் பல படைப்புகளை படைப்பதற்கு அவருக்கு எமது மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பே அவசியமானதாகும். முக்கிய பாத்திரங்களில் நடித்த புதியவன்,நவயுகா மற்றும் குழந்தையாக நடித்த புதியவனின் மகளுக்கும் வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள்.