ஒரு நூல் வெளியீடு அல்லது வேறு விழாக்களை எப்படி நாம் நடத்துவது, அங்கு சமூகம் கொடுக்கும் எம்மவர் மண்டபத்தில் எப்படி நடந்து கொள்வது.?


நான் சொல்லப்போவது! நான் கண்ணுற்ற அனுபவமும்+அறிஞர்களின் கருத்துமே!
1:- ஒரு விழாவை குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிப்பதே மிக+மிக அவசியமாக கருதப்படுகிறது.
2:- விழா நடத்துபவர் நேரக்கட்டுப்பாட்டுடன் நிகழ்ச்சி நிரலை ஒழுங்கு செய்துஅதனை ஒழுகி விழாவை நடத்துதல் அவசியம். நிகழ்ச்சி செய்பவர்கள் தத்தமது நிகழ்ச்சிக்காக குறிகாட்டிய நேரத்துக்கு வராவிடின்; காத்திருக்காது அவர்களது நிகழ்ச்சிகளை பின் போடலாம் அல்லது இரத்துச்செய்யலாம். 3:- அதிக தூரத்திலிருந்து ஒருவரை விழாவில் பேச அழைப்பின்அவருக்கான போக்கு வரத்து செலவை or சிறு தொகையை கொடுப்பது அவசியம்.Bienne நகரில் ஒருவர் இப்படி சிறு தொகையை கொடுத்தார்.
4:- விழாவுக்கு அழைத்தவர்களை முக்கியமாக பேச கூப்பிட்டவர்களை நாமே முன்னின்று or ஒருவரை நியமித்து அவருக்கான தண்ணி+உணவை கவனிக்கணும்.விழாமுடிய நாம் எவரையும் கவனிக்காது அடுப்படிக்குள் சென்று „போத்தலுடன் நிற்பது“ பண்பற்றதும்+அழைத்தவரை அவமானப் படுத்தலுமாகும்.
5:-முக்கியமாக குறுகிய இடைவேளை நேரம் மேடையிலே எந்த நிகழ்வும் நடாத்தக் கூடாது.ஏனெனில்மேடையில் பேசுபவரின் பேச்சை எவரும் செவிமடுக்க மாட்டார்கள். இது "பேசுவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்" 6:கைக்குழந்தைகள்+வயது முதிர்ந்தவர்கள் எமது அழைப்பை மதித்து விழாவுக்கு சமூகமளித்திருப்பர். மண்டபத்துள் பாட்டை செவிப்பறை கிளியுமளவுக்கு சத்தத்தை ஒலிக்க விடுவார்கள். அத்தோடு நீண்ட நாட்கள் நேரே காணாத உறவுகள்+ நட்புகள்+தெரிந்தவர்களுடன் உரையாட முடியாத நிலை தோற்றம் பெறுகிறது. இது வந்தவர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது.
7:- நூல் வெளியீடு என்றால்வேறு நிகழ்வும் இடம்பெறும்.நிகழ்வின் 60 வீதம் முடியுமளவில் நூலை வெளியிட்டு வாசகர் கைகளில் நூலை கொடுப்பதே நூல் ஆசிரியருக்கு நன்மை பயக்கும். அவரின் நோக்கமும் வெற்றியடையும். 8:- அதிக தூரத்தில் இருந்து புகை வண்டி மூலம் வருபவரை விழா முடிய நாம் ஒரு கார் ஒழுங்கு செய்து அவரை ரயில்வே ஸ்டேஷனிலே கொண்டு சென்று விடல் வேண்டும். 9:- குறித்த நேரத்துக்கு மக்கள் வந்து கலந்து கொள்ளணும். சில (இடைஞ்சல்க ளைத்தவிர). அப்படி வராது விடின் - அது மக்களின் தவறு. விழா நடத்துபவர்களின் தவறு அல்ல. 10:- விழாவுக்கு பிந்தி வருபவர்கள்- குறித்த நேரத்துக்கு வந்தவர்களை காத்திருக்க வைப்பது என்பது ஒரு மனிதனின் சொந்த நேரேம்+அவனது உழைப்பு+அவன் விழாவில் கலந்து கொள்வதற்காக தனது சில காரியங்களை ஒத்தி வைத்தும்+அதிக தூரத்திலிருந்தும் வந்திருப்பான்.இது அந்த மனிதனை அவமானப் படுத்தலுக்கு ஒப்பானது மேலும் விழா நடத்துபவருக்கு நேர இடர்பாட்டை கொடுப்பதோடு` அவரை சிக்கலிலும் மாட்டி விடுகிறோம். தமிழர் 3000 வருட நாகரிக வரலாற்றை கொண்டவர்களென கூறிக்கொண்டு இந்த அநாகரீக நடைமுறை செயற்ப்பாட்டை எமது வருங்கால சந்ததிகளுக்கும் நாமே கடத்துவது வேதனையுடன் கூடிய தூரநோக்கற்ற செயல். அனால் வெள்ளைக் காரன் விழா என்றால் சரியான நேரத்துக்கு போய் குந்துகிறோம் அல்லவா.? எம்மவர் விழாவென்றால் ஏன் இந்த விரும்பத்தகாத செயற்பாடு.?
11:தலைமை+தொகுப்பாளர்+பேச்சாளர் ஆகியோர் தமக்கு கொடுத்த தலைப்பு+ விடயம்+நேரத்துள் நின்று கருத்துக்களை கூறணும். தமது „வித்தக தன்மைகளை மேடையில் காட்டக் கூடாது.“ அது சபைக்கு சலிப்பைக்கொடுக்கும். தலைப்பையொட்டி சில எடுகோளை எடுத்தியம்பலாம்.
12:- சாப்பிட்ட குப்பைகளை நிலத்தில் போட்டும்+ரொய்லெற்றை முறைப்படி கையாளுவதுமில்லை.ஒரு வயது முதிர்ந்தவரை சில இடங்களில் நேரே பார்த்திருக்கிறேன்-தனது ரவுசரை சிறிது மேலே மடித்து தனது சப்பாத்துக் காலால் குப்பைத் தொட்டிகளை அமத்தியும்+கீழே வீசிய பேப்பர்களை பொறுக்கி குப்பைத்தொட்டிக்குள்ளும் போடுகிறார்.
13:- மேடையில் நிகழ்வு நடைபெறும்போது! பின்னாலே இருந்து சத்தம் வர கதைப்பது என்பது மேடையில் பேசுபவர்களுக்கும்+ அதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் பெரும் இடைஞ்சலை கொடுக்கிறது. பல மேடை கண்டவர்கள் கூட பின்னால் இருந்து பெரும் சத்தத்துடன் கதைப்பதை அவதானிக்க முடிகிறது. அப்படி கதைப்பதாக இருந்தால் தங்களுக்குள் மெதுவான குரலில் கதைக்கலாம் அல்லது மண்டபத்தை விட்டு வெளியில் சென்று கதைக்கலாம் அல்லவா.?
14:- விழா நடைபெறும் வேளை அவசியமற்று மண்டபத்துள் எழும்பி நடமாடாது பொறுமை காத்து இருக்கையில் அமரனும்.
இயன்றவரை எமது விழாக்களை சிறப்பாகவும்+ஒழுங்கு முறைமையிலும் நடாத்த முயலுவோம்+ஒத்துழைப்பும் கொடுப்போம்.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert