பிரபல இலங்கை எழுத்தாளரும் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்டஈழ தம்பிரஐயா தேவதாஸ் அவர்களுக்கு கனடாவில் ரொறன்ரோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானம் ‘சமூக நற்பணி ஊடகவியலாளர்’ பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
தற்போது தனிப்பட்ட பயணமாக கனடாவிற்கு வந்துள்ள அவர் தனது குடும்பத்தினரோடு தங்கியிருந்து இங்குள்ள கலை இலக்கிய பத்திரிகை நண்பர்களை சந்தித்து வருகின்றார்கள். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்பர்கள் பலர் அவரை சந்தித்தும் மகிழ்வித்தும் அன்பு பாராட்டி வருகின்றனர்.
இந்த வரிசையில் கனடா ஶ்ரீ ரொறன்ரோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானத்தின் ஸ்தாபகரும் பிரதம சிவாச்சாரியாரும் சமூக சேவையாளருமான சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள், எழுத்தாளர் தம்பிஐயா தேவதாஸ் அவர்களை தனது ஆலயத்திற்கு அழைத்து, ஏனைய சிவாச்சாரியார்கள் சகிதம் அவரைக் கௌவித்தார்கள்.
அன்றைய தினம் அவருக்கு பொன்னாடை போர்த்தி.அவரது பன்முக ஊடகப் பணி, ஆசிரியர் பணி, சமூகப் பணி ஆகியவற்றை எடுத்துரைத்து பின்னர் மேற்படி ‘சமூக நற்பணி ஊடகவியலாளர்’ பட்டத்தையும் வழங்கினார்கள்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.
(செய்தி: சத்தியன் படங்கள்: ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானம்-கனடா)