எழுத்தாணி நான் பேசினால்!கவிதை கவிக்குயில் சிவரமணி

தாகத்தோடு நான் இன்று
தவிப்புக்கள் ஆயிரம் அனைத்தும்
தந்துவிடத்தான் துடிக்கின்றேன்
தருணம் அது உகந்ததானால்

தமிழரின் பெருமைதனை
தலைமுறைக்கு விதைக்க வேண்டும்
தட்டிக்கேட்க முடியாத உலகை
என் எழுதுகோல் சாட வேண்டும்

வீழ்ச்சி கண்ட தமிழினத்தை
வீச்சுபெறச் செய்யவேண்டும்
எழுச்சியோடு உணர்ச்சியும்
பொங்கிடவே விதைக்கவேண்டும்

மண்டியிடா தமிழன் மாண்பை
மாறியசரித்திரப் பாடமாக்கவேண்டும்
உலகத்தமிழருக்கென ஓங்கிய குரல்கள்
உலகச்சூரியன் என எழுத வேண்டும்

ஆண்ட தமிழினப் பெருமையெலாம்
ஆறுமோ நான் எழுதிட
மாண்ட தமிழின விழுமியங்கள்
மறுபடி உதிக்குமோ நான் எழுதிட

ஏர் பிடித்த உழவன் முதல்
ஏற்றம் கண்ட விஞ்ஞானி வரை
கல்லா நிரப்பும் கனவான் முதல்
கல்லுடைக்கும் கூலி வரை நான் எழுத வேண்டுமே

நான் எழுத ஆயிரம் கருவுண்டு
ஆனாலும் தடைகள் பலவுண்டு
மாறாக தமிழ்ப்பற்று நிறைய உண்டு
நானாக நான் இருக்க எழுதுவேன் நாளுமே.!!

ஆக்கம் கவிக்குயில் சிவரமணி

Merken