எம்.பி.கோணேஸ் பற்றி கே. பாக்கியராஜ் – டென்மார்க்

கே. பாக்கியராஜ் – டென்மார்க்
எம்.பி.கோணேஸ் சகோதரர்கள் வெளியுலகிற்கு என்னை அறிமுகப்படுத்தியவர்கள்.


திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் எம்.பி.கோணேஸ் அவர்களின் வீட்டிற்கு
அருகிலேயே குடியிருந்தேன். இதன் காரணமாக அடிக்கடி இவர்களின் இசைப் பயிற்சிகளைக்
கண்டு கழிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அன்றைய நினைவுகளை இன்றும் எண்ணிப்
பார்ப்பேன். என்னையும் இவர்கள் நடாத்தும் இசை நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொண்டதால், எனக்கு இலங்கை வானொலியிலும வாய்ப்பு கிடைத்தது. நான் பாடிய ஷபுது ரோஜா மலரே|
மெல்லிசைப் பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்ற பாடலாகும். அன்றைய நாளை
நினைக்கும் போது இனம் புரியாத உணர்வுகள் எனக்குள் ஏற்படும்.
இவர்களுடன் இணைந்து பல மேடைகளில் பாடியிருக்கிறேன்.

மெல்லிசைப் பாடல்களால் அவர்க்ள அடைந்த வெற்றி எண்ணிப் பார்க்க முடியாதது. அன்று பெரும் செல்வாக்கு
இச்சகோதரர்களின் குழுவிற்கு இருந்தது. இவர்களின் இசைப் பயணத்தின் ஒரு வருட பூர்த்தி
விழா திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியில் மிக விமரிசையாக நடைபெற்ற போது கண்டு
கழிக்க வந்த பார்வையாளர்கள் எம்மை வாழ்த்தி இசைக் கலைஞர்களைப் பாராட்டிய அந்த
நாளை என்னால் மறக்க முடியாது. எம்.பி.கோணேஸ் மற்றும் எம்.பி.பரமேஸ் இருவரும்
வெவ்வேறு திறமைகள் கொண்டவர்கள். எம்.பி.கோணேஸ் அவர்கள் இசையில் மிகுந்த ஆர்வம்
கொண்டவர். இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து வாத்தியக் கருவிகளை முறையாக
ஒழுங்குபடுத்துவது, இசைக் கோர்வைகளை சகோதரருடன் இணைந்து சரி பார்ப்பது எனப் பல
விடயங்களையும் கவனிப்பார். இது போல் இவர் சகோதரரும் பாடல்களை எழுதுவது, பாடுவது
எனப் பல விடயங்களையும் கவனித்துச் செயற்படுவார். பல இசை மேடைகளை வெற்றிகரமாக
இருவரும் நடாத்தினர ;.
எம்.பி.கோணேஸ் 1980ஆம் ஆண்டில் சகோதரரை விட்டுப் பிரிந்து சென்று தனியாக இசைக்குழு
ஒன்றை நடாத்தி வந்த போது அவருடன் இணைந்து பல பங்களிப்பை ஆற்றியது மறக்க
முடியாது. அதுமட்டுமல்லாது நான் அப்சராஸ் குழுவிலும், கண்ணன்-நேசம் குழுவினருடனும் பின்பு
வானொலி கலைஞனாக இணைந்து பல பாடல்களைப் பாடியதும் மறக்க முடியாது. இலங்கை
மண்ணில் பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்ற
இவர்கள் சில கருத்து முரண்பாடுகளால் தம் இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது
பலருக்கும் கவலையைக் கொடுத்தது. இருந்த போதிலும் எம்.பி.கோணேஸ் அவர்களுடன் சேர்ந்து
இசைப்பயணம் செய்ததை என்றும ; என்னால் மறக்க முடியாது.
எம்.பி.கோணேஸ் 1978 முதல் இலங்கை ஒலிபரப்புப் கூட்டுத்தாபனத்தில் இசையமைப்பளாராக
தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றினார். அவரின் இசையில் நானும் பல பாடல்களைப் அங்கும்
பாடியிருக்கின்றேன். அவரின் பாடல்கள் இசையமைப்பு இன்றும் 50 வருடங்களைக் கடந்து
மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்கும் அவரின் இசையமைப்பே முக்கிய காரணம் என்பதனை
யாராலும் மறக்க முடியாது.
அவர் கனடாவில் வாழ்ந்தாலும் தொடர்ந்தும் இசையுலகின் ஜாம்பவானாக திகழ்வது எமக்கு
எல்லாம் பெருமையாக இருக்கின்றது. அத்துடன் அவரின் மனைவி பத்மனி கோணேஸ் மற்றும்
மகன் பிரதீப் கோணேசும் அவருக்கு பக்கபலமாக இருப்பது ஆண்டவன் கிருபை. திருமதி.
பத்மினி கோணேஸ் ஓர் சிறந்த வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் என்பதும் இங்கு
குறிப்பிடத்தக்கது.